சிங்காரவேலர் நினைவுநாள் பாகம் -2


பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரிடையாகக் கிளம்பிய சிப்பாய்க் கலகம் 1857-ல் நடந்தது. சிறுவன் சிங்காரவேலனுக்கு, அந்தக் கலகம் காலத்துச் சம்பவங்களையே, வீட்டாரும் ஊராரும் கூறியிருப்பார்கள். பொழுது போக்குக்கோ, மிரட்டவோ, எக்காரணத்துக்காகவோ, கம்பெனிக்காரனைச் சிப்பாய்கள் எதிர்த்தனர். எதிர்த்தவர்களை வெள்ளைக் காரர் சுட்டனர் என்று சிறுவயதிலே அவர் கேள்விப்பட் டிருப்பார். நமது காலத்தைப்போல் கவர்னர் ஜெனரலின் கனவு - கோகலேயின் தெளிவு - முதல் சீர்திருத்தத்தின் அழகு - என்பன போன்றவைகளை அல்ல, அவர் சிறுவராசு இருக்கும்போது கேட்டது. 


நாம் அடிமைத் தனத்திலே - நாடு அதிகமாக ஊறிப்போன காலத்திலே பிறந்தோம்; அவர் ஆங்கிலேய ஆட்சியை ஆயுத பலத்தால் தாக்கிய சிப்பாய்க் கலகம், சிறுவர்களுக்கான சிறு கதை யாகப் பேசப்பட்ட காலத்திலே பிறந்தவர். 1862-ல், சிப்பாய்க் கலகம் அடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பிறகு அவர் பிறந்தார். புயல் அடித்து ஓய்ந்தது. ஆனால் சாய்ந்துபோன மரங்களிலே சில, பாதையிலே கிடந்தன! அப்படிப்பட்ட சமயத்திலே பிறந்தவர், சிங்காரவேலர். இறுதிவரையில் அவரைப் பொருத்தவரையிலே 1857 தான் ஏகாதிபத்யம், முதலாளித்னம், வர்ணாஸ்ரமம், மௌடீகம்? இவைகளைத் தாக்கும் பேச்சுத்தான் அவருக்கு மேடையிலே மட்டுமல்ல, வீட்டில்; பேச்சிலே மட்டுமல்ல பார்வையிலே அப்படித்தான்.


மிதவாத மணிகள் மயிலையில் பலர் தேசியக் கனவான்களும் உண்டு. சீமான்கள் உண்டு; சிங்காரவேலர், வழுக்கியிருந்தால், இதிலே எதில் வேண்டுமானாலும் தங்கி விட்டிருக்கலாம். சட்டம் படித்தார்; வக்கீல் ஆனார். ஆனால் எதற்கு? அன்னிய ஆட்சிக்காரன் சட்டம் தொகுப்பது, அதை நாம் படித்து வாதாடுவது என்பது அடிமைத்தனத்தின் சின்னம் என்று கூறி, அந்த வக்கீல் அங்கியை நெருப்பிட்டுக் கொளுத்தினார்; கோர்ட்டை ஏற மறுத்து, மக்கள் மன்றத்திலே, வழக்கை எடுத்துரைத்தார் திறமையுடன். அவருக்கு ஜெர்மன், பிரஞ்சு, ரஷ்ய மொழிகளும் தெரியும்.


இந்தியாவிலேயே விஞ்ஞான அறிவுக்கலை சம்பந்தமாகவும், பொதுவுடைமை சம்பந்தமாகவும் அதிகம் படித்துப் புரிந்துகொண்டு, அந்த அறிவைக்கொண்டு மற்றவர் களுக்கும் அவை புரியும்படியாகச் செய்த பெருமைக்குரிய இடத்தில் முன் வரிசையில் முதலிடம் அவருக்கே அளித் தாக வேண்டும்.


ஓயாத படிப்பு; உள்ளத்திலே வேதனை தரும் சகல பிரச்சினைகளும், அவர் காரண காரியம் தேடுவதிலேயே மிகக் கவலை எடுத்துக்கொண்டு உழைத்தார். நுனிப்புல் மேய்வது அவருக்குப் பிடிக்காது. பிரச்சினைகளைப் பூசி மெழுகினால் ஆத்திரப்படுவார் ; வீண் ஆரவாரத்தால் மக்களை மயக்கும் இயக்கங்களைக் கண்டிப்பார். கடலோரத்திஸ் கடைசியில் தானொருவனே உலாவுவதனாலும், கடைசியில் கொள்கையின் தோழமை ஒன்று இருந்தால் போதும் என்று கருதினார் ஏறக்குறைய, கடைசிக் காலத்தில் அவர் தனி மனிதர் போலவே நின்றார். அந்த முதியவர் எவ்வளவு உயரமான, புாட்சிகரமான கருத்துகளைத் தாங்கிக்கொண்டு இருந்தார் என்பதை எண்ணும்போதே ஆச் சரியம் உண்டாகும்.


"பேய் பூதம் பீசாசு உண்டா? என்று கேட்டுவிட வேண்டியது தான். பேய் பூதம் பிசாசு என்ற சொல் எப்பொழுது உபயோகத்திலே கொண்டு வரப்பட்டது என்பதிலிருந்து தொடங்கி, இன்று, பிறன் உழைப்பைக் கொண்டு வாழ்பவனே உண்மையான பேய் என்கிற வரையிலே கூறிவிடுவார்; சந்தேகங்களைத் தெளியவைக்கும் முறையிலே, அவருடைய மனம், ஒரு சிறந்த அகராதியாக இருந்தது. அப்படிப்பட்டவரின் மறைவு, சர்வ சாதாரணச் செய்தியாகிவிட்து. இந்த நாட்டிலே எண்ணற்ற பத்திரிகைகள் இருக்கின்றன. அவற்றிலெஸ்லாம் இலட்சிய வாதிகள் பேனாப் பிடித்துக்கொண்டு இருக்கின்றனராம்!


அவர் வீரர், தீரர், என்பதை யாரும் மறுக்கமாட் டார்கள். கிளர்ச்சிகள் அவருக்கு நிலாச் சோறு. சிறை வாசம் அவருக்குச் சசுறும். அவர் எதிர்ப்புக்கோ, ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கோ அஞ்சினவருமல்லர். கும்பலோடு சேர்ந்து சிறைக் கூண்டு போனவருமல்லர். தேசியத்தின் பேரால் முதல் முதல் கைது செய்யப்பட்ட பெருமை, லோகமான்ய திலகருக்கு என்பார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், திலகரைத் தீண்டுவதற்கு முன்பே, தோழர் மா. சிங்காரவேலுவைத் தாக்கிவிட்டது. தேசிய ஆரவாரத்தினால் இந்த உண்மை மறைந்துபட்டது. கான்பூரில் பொது உடைமைக்காரர்கள் என்ற குற்றத்துக்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தோழர் சிங்காரவேலுவையும், மெளலானா அசாத் மோகானியையுந்தான் முதல் முதல் கைது செய்தது.


''தொழிலாளர்கள்' என்ற ஒரு பிரிவினர் உள்ளனர் என்ற உண்மையையே, நாடு அறியும்படி முதலில் எடுத்துக் கூறிய பெருமையும், மா. சிங்காரவேலு உடையதாகும்.  இங்கிலாந்திலே தொழிலாளர் கிளர்ச்சி ஆரம்பமானபோதே, இங்கு இவர், அத்தகைய கிளர்ச்சியைத் துவக்கினார்.


கூனன்போல் காணப்பட்ட இந்தியாவின் நிலையைக் கண்ட சிங்காரவேலு, முதுகெலும்பு வளைந்தால், கூனி நடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதைக் கண்டு பிடித்து, நாட்டுக்கு முதுகெலும்பு தொழிலாளரே என்பதை அறிந்து, அந்தத் தொழிலாளரின் விழிப்புக்காக வேலை செய்யத் தொடங்கினார். தொழிலாளர்கள், மதத் தின் பேராலும், அரசியலின் பேராலும், மௌடீகத்தாலும் அடக்கப்பட்டு வரும் கொடுமையைக் கண்டு கொதித்தார்

(தொடரும்)

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.