சிங்கார வேலர் நினைவு நாள் அறிஞர் அண்ணாவின் கட்டுரை பாகம்-3

சிங்கார வேலருடைய அபாரத் திறமை தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தின் போது நன்கு விளங்கிற்று. அதுசமயம் அவர், பத்து ஆண்டு சிறைத்தண்டனை தரப்பட்டார்.


ரயில்வே வேலை நிறுத்தம் நான்கு நாட்கள் வெற்றி கரமாக நடந்ததைக் கண்டு, ரயில்வே தலைமை அதிகாரி, ரயில்வே தொழிலாளர்களுடன் சமாதானத்திற்கு வருவதைத் தடுத்தவர்களும், தானும் தனது சகாக்களும் கடும் தண்டளை பெற்றதிலிருந்து தப்பி, அப்பீல் மூலம் முயன்ற காலத்தில், அதற்கு எதிராக இருந்தவர்களும், பெசண்டு அம்மையாரும் அவர் தம் சிஷ்ய கோடிகளும்தான் என்பதைத் தோழர் சிங்காரவேலர் நன்கு உணர்ந்தார். ரயில்வே வேலை நிறுத்தத்தில். இந்நாட்டுப் 'பத்திரிகை ஜாதி செய்த பொய்ப் பிரசாரம் அன்றைய ஒரு லட்சம் தொழிலாளர் வாயில் மண் போட்டது என்பதற்கும், பின் தலை எடுக்கவேண்டிய கோடானு கோடி தொழிலாளரின் கண் விழிப்புக்குத் தடைக் கல்லாக இருந்தது என்பதையும் கண்ட பின்பே, அவர் மன மாறுதல் அடைந்தார். சமூகம் உண்மையாக நியாயம் பெறவேண்டுமானால், முதலாளிகளான வெள்ளை முதலானி, கருப்பு முதலானி ஆகிய இவர்களின் பிடியினின்று விடுதலையாகுமுன், முதலாளிகட்கும், தொழிலாளிகட்கும், உண்மையில் துரோகிக ளாக உள்ள போலித் தொழிலாளர் தலைவர்களும் அவர்கள் பத்திரிகைகளும் தொலைய வேன்டுமென்று எண்ணினார். அவர் தொழிலாளர் இயக்கத்திலிருந்து சுயமரியாதை இயக்கத்திற்கு வந்ததற்குக் காரணம் இதுவே யாகும்.


தோழர் சிங்காரவேலர், சிறந்த ஒத்துழையாதார். நல்ல வரும்படி வந்த காலத்திலும், காந்தீயத்தில் நம்பிக்கை கொண்டு தனது வக்கீல் வேலையை விட்ட, ஒரு சில சென்னை வக்கீல்களில் சிங்காரவேலர் முதன்மை யானவர். காங்கிரசின் பேரால் வக்கில் வேலையை விட்டு, பின்பு, மீண்டும் கோர்ட்டுக்குப் போன வக்கில்களில் சிங்காரவேலர் சேர்ந்தவரல்லர். சிறந்த ஒத்துழையாதாராகவே இருந்தார். 


சென்னையில் பொதுமக்களின் பேரால் நடந்த பெரிய "கிளர்ச்சிகள்” நான்கு என்று சொல்ல லாம். சூளை மில் வேலை நிறுத்தம்; பிரின்ஸ்-ஆப்-வேல்ஸ் பகிஷ்காரம் ; சைமன் பகிஷ்காரம்; கானாட்டுக் கோமகன் (Duke of Connaught) பகிஷ்காரம்- என்பவைகளில் தோழர் சிங்காரவேலர் முதல் மூன்றிலும் பூரண பங்கெடுத்துக்கொண்டார். இதே காலத்தில் அமெரிக்காவில், சக்கோ, வான்சிட்டி என்ற இரண்டு பொது உடைமைத் தோழர்கள், பொது உடைமை வழக்கில் சம்பந்தப் பட்டு எலக்ட்ரிக் நாற்காலி மூலம் கொல்லப் பட்டார்கள். இச்செயலைக் கண்டிக்கச் சென்னை பீப்பில்ஸ்- பார்க்கில் தோழர் சிங்காரவேலர் ஓர் பிரம்மாண்டமான கூட்டத்தைக் கூட்டிஞர், மாகாண சர்க்கார் பயந்து, தனது போலீஸ் படை முழுவதையும் அனுப்பி, அக் கூட்டத்தைப் பயமுறுத்தியது. அன்றையக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்க ஒத்துக்கொண்டவரும், பிரசங்கம் செய்யச் சம்மதித்தவர்களும் போலீஸ் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அஞ்சி அந்தப் பக்கமே வரவில்லை.


மனம் `அலுத்த சிங்காரவேலர், தனியாகப் பீப்பில்ஸ் பார்க் பக்கம் வந்தார். தன் நண்பர்கள் யாரும் வரவில்லையே என்பதற்காகப் பயந்து விடவில்லை. கூட்டமோ இவ்வளவு தடபுடலாகக் கூடாது என்று எண்ணி வந்த சிங்காரவேல், அங்குக் கண்டதென்ன ? 


பிரம்மாண்டமான கூட்டத்தையும், அதன் மத்தியில் ஒருவர் சமதர்மப் பாடல் பாடுவதையும், இரண்டு மூன்று இளைஞர்கள் மேடை மீது இருப்பதையும் கண்டார். தான் எதிர் பாராத சம்பவம் நடப்பதைக் கண்டு, ஓர் சிறிய புன்னகையுடன் மேடையருகில் வந்து பார்த்தார். மேடை மீது இருந்தவர்கள் தனக்குப் புதிதாய் இருந்தாலும், அன்று தான் எடுத்துக்கொண்ட வேலைக்குக் தனக்கு உதவியாக இருப்பதைக் கண்டு, ஆச்சரியப்பட்டார். கூட்டமே நடக்காது என்று எண்ணியவர், சென்னைப் பொது மக்கள் இவ்வளவு போலீஸ் மிரட்டலையும் அலட்சியப்படுத்திக் கொடுமையாகக் கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்கத் தொழிலாளர்களிடம் அனுதாபம் காட்டி, அவர்கள் கொள்கையை ஆதரிப்பதற்கு அறிகுறியாக இக்கூட்டம் கூடும்படி செய்த சென்னைப் பொது மக்களைப் பாராட்டினார். இக் கூட்டத்தில் தான், காலஞ் சென்ற சிங்கார வேலரின் சுவனம் சுயமரியாதை இயக்கத்தின் பக்கம் திருப்பப் பட்டது.


 பட்டுக்கோட்டைத் தோழர் அழகர்சாமி சொன்னார். 'செருப்புத் தைக்கும் சமூகத்திலும் மீன் பிடிக்கும் சமூகத்திலும் பிறந்த இரண்டு தொழிலாளர்கள், அமெரிக்கச் சர்க்காரால் தண்டிக்கப் பட்டார்கள் 'தொழிலாளர் சமூகம் விழிக்குமுன்பு, இத்தகைய சம்பவங்கள் பல நிகழவேண்டுமா?. நமது நாட்டுத் தொழிலாளர் உலகம் கண்விழித்து இத்தாலிய மீன்பிடிக்கும், தொழிலாளியான வான்சிட்டி இறந்ததைப் போல், நமது உண்மைத் தொழிலாளர் தலைவரான சிங்காரவேலர் இந்நாட்டு வான்சிட்டியாகச் சர்க்காரால் தண்டிக்கப்பட்டு, அக் கூட்டத்தைக் காண ஆசைப்படுகிறேன் 'என்று. 


இச்சொல் ஒன்றே சிங்காரவேலரைச் சுயமரியாதைக்காரனாக்கியது

(தொடரும்)

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.