ஐக்கிய முன்னணி தந்திரம், பாகம் - 2.

ஐக்கிய முன்னணியின் உள்ளடக்கமும் உருவங்களும்;



1. தொழிலாளி வர்க்கத்தின் உடனடியானப் பொருளாதார அரசியல் நலஉரிமைகளை பாதுகாப்பது, பாசிசத்திற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கத்தைப் பாதுகாப்பது ஆகியவைதான். எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் ஐக்கிய முன்னணியில் தொடக்கப் புள்ளியாகவும் பிரதான உள்ளடக்கமாகவும் அமைய வேண்டும்.


2. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்குகானப் போராட்டத்திற்கு வெறும் வேண்டுகோள் அறிக்கைகளுடன் மட்டும் நாம் நின்று விடக் கூடாது. மக்களுடைய அதி முக்கியமான தேவைகளிலிருந்து எழக்கூடிய முழக்கங்களையும் போராட்ட வடிவங்களையும் கண்டு, அவற்றை முன்னுக்கு எடுத்துச் செல்லவும், அவற்றைக் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில்  மக்களுடையப் போராட்ட வலுவையும் ஒரே அளவாக இணைத்து செல்லவும் வேண்டும்.


3. முதலாளித்துவ கொள்கைக்கும், பாசிஸ்ட் காட்டுமிராண்டித் தனத்திற்கும் எதிராக மக்கள் இன்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நாம்  சுட்டிக் காட்ட வேண்டும்.


4. உழைக்கும் மக்களுடைய மிகமுக்கியமான நலஉரிமைகளை பாதுகாப்பதற்காக, பல்வேறு கருத்துப் போக்குகளையும் கொண்டுள்ள தொழிலாளர் அமைப்புகளின் கூட்டுச் செயலின் உதவிகொண்டு மிகப்பரந்த ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கு நாம் பாடுபட்டு முயற்சிக்க வேண்டும். அதன் பொருள் என்னவென்றால்;


I) நெருக்கடியின் விளைவுகளின் பலுவை ஆளும் வர்க்கங்களான முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்காரர்களுடைய தோள்களில் மாற்றுவதற்கான உண்மையானக் கூட்டுப் போராட்டம்.


II) பாசிஸ்ட் தாக்குதல்களின் சகல விதமான வடிவங்களை   எதிர்த்தும், உழைக்கும் மக்களுடைய உரிமைகளையும், சாதனைகளையும் பாதுகாக்கவும், முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளையும் கூட உடைத்தெறிவதை எதிர்த்து கூட்டுப் போராட்டம்.


III) வரக்கூடிய ஏகாதிபத்திய யுத்த அபாயத்தை எதிர்த்து அவ்வாறான யுத்த தயாரிப்புகளையும் தடுத்துத் தகர்ப்பதற்கானக் கூட்டுப் போராட்டம்.


IV) நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது, போராட்டங்களின் வடிவங்களிலும் முறைகளிலும் வேகமான, உடனுக்குடன் கூடிய மாற்றத்தைச் செய்து கொள்வதற்கும், தொழிலாளி வர்க்கத்தைத் தளர்ச்சியின்றி தயார் செய்து கொள்ள வேண்டும். இயக்கம் வளரும்போது தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை வளரும்போது நாம் மேலும் முன்செல்ல வேண்டும்.

 

முதலாளித்துவத்திற்கு எதிராகத் தற்காப்பு என்னும் நிலையிலிருந்து தாக்குதல் கட்டத்திற்கு மாறுவதற்கு தயாரித்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய வெகுஜன அரசியல் வேலைநிறுத்தத்தை உருவாக்குவதற்கான வகையில் வழித் திருப்பி வைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய வேலை நிறுத்தத்திற்கு குறிப்பிட்ட நாடுகளில் உள்ள பிரதான தொழிற்சங்கங்கள் சேர்ந்திருக்க வேண்டும் என்பது ஒரு கட்டாயமான நிபந்தனையாகும். 


கம்யூனிஸ்டுகள் தங்களுடையச் சொந்த சுயேச்சையான வேலையான, கம்யூனிஸ்ட் கல்வி, மக்களை ஒன்று திரட்டுவது, அமைப்பு வேலைகள் ஆகியவற்றை ஒரு கணம் கூட நிறுத்தி வைக்க முடியாது. நிறுத்தி வைக்கவும் கூடாது என்றபோதிலும். செயல் ஒற்றுமையின் வழியில் தொழிலாளர்களை நிறுத்திவைக்க உறுதிப்படுத்துவதற்காக சமூக ஜனநாயகக் கட்சிகள், சீர்திருத்தவாத தொழிற்சங்கங்கள் பாட்டாளிவர்க்க விரோதிகளுக்கு எதிராக உள்ள உழைக்கும் மக்களின் இதர அமைப்புகள் ஆகியவற்றுடன் குறுகியகால உடன்பாடும், நீண்ட காலத்திற்கான உடன்பாடும் ஆகிய இருவகை உடன்பாடுகளையும் செய்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். இதில் பிரதான அழுத்தம் கொடுக்க வேண்டியது, மைய (ஸ்தல) ரீதியில் வெகுமக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டியதாகும். மையப்படுத்தப்பட்ட (ஸ்தல) ஒப்பந்தங்கள் மூலமாக ஒன்று சேர்ந்துள்ள அமைப்புகள்  நடத்தும் இயக்கங்களை உருவாக்க வேண்டியதாகும்.


அவர்களுடன் செய்து கொண்ட எல்லா ஒப்பந்தங்களின் நிபந்தனைகளையும் நாம் மிகவும் விசுவாசத்துடன் நிறைவேற்றும் அதே சமயத்தில், ஐக்கிய முன்னணியில் பங்கு கொள்ளும் அமைப்புகள் தனிநபர்கள் கூட்டு நடவடிக்கைகளை நாசவேலை செய்தால் அவற்றைக் கருணையின்றி அம்பலப்படுத்த வேண்டும். எந்த ஒப்பந்தங்களையும் உடைப்பதற்குச் செய்யும் எந்த முயற்சியும் அத்தகைய முயற்சிகள் நடக்கூடும் என்பதைப் பற்றி நாம் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்போம். அதேசமயத்தில் உடைக்கப்படும் செயல் ஒற்றுமையை மீண்டும் செம்மைப்படுத்தி சீர் அமைப்பதற்கானப் போராட்டத்தை  விடாமுயற்சியுடன் தொடர்ந்து விடாப்பிடியாக நடத்திக் கொண்டிருக்க வேண்டும். 


ஐக்கிய முன்னணியை வெளிப்படையாக உருவாக்கித் தொழிலாளர்களின் அமைப்பு நிலைமை, தன்மை, குணாம்சம், அவர்களின் அரசியல் வளர்ச்சி மட்டம், ஒரு குறிபிட்ட நாட்டில் உள்ள புற நிலைமை, சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் முன்னேற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றை பொறுத்துப் பல்வேறு நாடுகளில் பல்வேறு வடிவங்களை எடுக்கும் என்பது சொல்லாமலேயே விளங்குவதாகும். கோரிக்கைகள் மீது கொண்டுவரப்பட வேண்டும். எடுத்துகாட்டாக தொழிலாளர்களின் ஒருங்கிணைக்கப்பட்டக் கூட்டு நடவடிக்கைக் குறிபிட்ட நேரங்களில் பிரச்சினைக்குப் பிரச்சனைத் தனிபட்டக் கோரிக்கைகள் மீது அல்லது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் மீது கொண்டுவரப்பட வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலையிலோ அல்லது ஒரு குறிபிட்ட தொழில் முழுவதிலுமோ ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு செயல்பாடு; மையப்படுத்திய (ஸ்தல) அளவிலும், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் அல்லது சர்வதேசிய அளவிலும் கூட்டினைப்பான நடவடிக்கைகளை உருவாக்குவது. தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டங்களை உருவாக்கித் திரட்டுதல், வெகுமக்கள் அரசியல் நடவடிக்கைகளை நடத்துதல், பாசிசத் தாக்குதல்களை எதிர்த்துக் கூட்டுத் தற்காப்பை உருவாக்குவது, அரசியல் கைதிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவி செய்வது, சமுதாயப் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகப் போராட்டம் முதலியவற்றில் கூட்டு நடவடிக்கை. இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் நலஉரிமைகளைப் பாதுகாப்பதற்குக் கூட்டுறவு இயக்கம், கலாச்சார நடவடிக்கைகள், விளையாட்டு அரங்கம் முதலியவற்றில் கூட்டு நடவடிக்கைகளை கொண்டுவருவது. கூட்டு நடவடிக்கைக்கு வகை செய்யும் முறையில் ஒரு உடன்படிக்கையை உருவாக்க வேண்டும். உடன் படிக்கை என்பது கூட்டு நடவடிக்கைகைக் கூடுவதற்கான ஒரு துணைச் சாதனம் தவிர வேறு எதுவும் இல்லை. அது மட்டும் ஒரு ஐக்கிய முன்னணியாக அமைந்து விடாது. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிட் கட்சிகளின் தலைவர்களிடையில் ஒரு தொடர்புக் கமிஷன் இருப்பது கூட்டு நடவடிக்கைக்கு உதவிகரமாக வசதியாக இருக்கும். எனவே ஐக்கிய முன்னணியின் ஒரு உண்மையான வளர்ச்சிக்கு, பாசிசத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்திற்குக் கூட்டு நடவடிக்கை  எந்த வகையும் போதாது.  


கம்யுனிஸ்டுகளும் சகலப் புரட்சிகரமான தொழிலாளர்களும் எந்த சார்பிலும் அல்லாத ஐக்கிய முன்னணியின் வர்க்க அமைப்புகளை தொழற்சாலைகளில், வேலையில்லாதோர் இடையில், தொழிலாளி வர்க்க மாவட்டங்களில், சிறிய நகர்புற மக்களிடையில் கிராமங்களில் அத்தகைய அங்கங்களால்தான் ஐக்கிய முன்னணி இயக்கத்தில் அமைப்பு ரீதியில் இல்லாத  ஏராளமான உழைக்கும் மக்களை ஒன்று கூட்டி அரவணைத்துக் கொண்டு முதலாளித்துவத்தின் பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிராக மக்களை முன்கை எடுத்து ஈடுபடுத்த வளர்க்க உதவி செய்யும். முதலாளித்துவ நாடுகளில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கட்சியல்லாத போல்ஸ்விக்குகளைப் பயிற்சிக் கொடுக்க முடியும்.  


பிரான்சில் அமைப்பு ரீதியில் திரண்டுள்ள தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், பல்வேறு கருத்து போக்குகளை கொண்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால் மொத்தத் தொழிலாளர்கள் ஒரு கோடியே பத்து லட்சம் பேர். 

பிரட்டனில்  பல்வேறு கருத்துகளைக் கொண்ட தொழிற்சங்க கட்சிகளின் உறுப்பினர்கள் 50 லட்சம் பேர். ஆனால் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1கோடியே 40 லட்சம் பேர். 

அமெரிக்க ஐக்கிய நாடுகளில்  அமைப்பாக உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 50 லட்சம் பேர் ஆனால் அந்த நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சம் பேர். சாதாராணமானக் காலங்களில் இந்தப் பெரும் ஜனப்பகுதி பெரும்பாலும் அரசியல் வாழ்வில் பங்கொள்வதில்லை ஆனால் இயக்க வேகத்தில் உந்தப் பட்டு அரசியல் வாழ்வில் ஜனக் கூட்டம் அரசியல் அரங்கில் வெளியே வருகிறது.

எந்த சார்பும் இல்லாத வர்க்க நிறுவனங்களை உண்டாக்குவதும் விரிவான மக்கள் பகுதியின் அடிமட்ட அணிகளுக்கிடையில் ஐக்கிய முன்னணியை உருவாக்கி நிறைவேற்றுவதும், விரிவாக்குவதும், பலப்படுத்துவதும்தான் மிகச் சிறந்த வடிவமாகும். இந்த அங்கங்கள் ஐக்கிய முன்னணியின் எதிர்ப்பாளர்கள் தொழிலாளி வர்க்கத்தின் செயலொற்றுமையைச் சீர்குலைப்பதற்கு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிரான மிகச் சிறந்த அரணாக அமைகிறது. 


தொடரும்…….

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.