ஐக்கிய முன்னணி தந்திரம் பாகம்-3

பாசிஸ்ட் எதிர்ப்பு மக்கள் முன்னணி;



பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் முழுவதினுடைய வெற்றியானது ஒருபக்கம் பாட்டாளி வர்க்கம் மறுபக்கம் உழைக்கும் விவசாயிகள், நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ வர்க்கமாகவுள்ள அடிப்படை மக்கள்பகுதி அதாவது தொழில்துறையில் மிக வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் கூட மக்கள்தொகையில் மிகப் பெரும்பான்மையினராக உள்ள இந்த மக்கள்பகுதிக்கு இடையில் ஒரு போராட்டக் கூட்டை உருவாக்குவதுடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டதாகும்.

பாசிசம் தனது கிளர்ச்சி பிரச்சாரத்தில் இந்த மக்கள் பகுதிகளையெல்லாம் தனது பக்கத்தில் வெல்வதற்கான விருப்பத்தில், நகரங்களிலும், கிராமப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைப் புரட்சிகரமானப் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக நிறுத்துவதற்கு முயற்சிக்கிறது.

சிவப்பு அபாயம் என்று பூச்சாண்டிக் காட்டி குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை அச்சுறுத்தித் தன்பக்கம் கொண்டுவர முயற்சிக்கிறது.

உழைக்கும் விவசாயிகளுக்கும், கைத்தொழிலாளர்களுக்கும், உழைக்கும் படிப்பாளி வர்க்கத்திற்கும், உண்மையான ஆபத்து எங்கிருந்து தோன்றி வருகிறது என்பதை நாம் ஈட்டி முனையை எதிர்திசையில் திருப்பிக் காட்ட வேண்டும். வரிப் பளுவையும், திறைப்பளுவையும் விவசாயிகளின் மீது திணிப்பது யார்.

அவர்களிடமிருந்து கொடுமையான வட்டியைக் கசக்கிப் பிழிவது யார். மேலும் யார் நல்ல செழிப்பான நிலத்தை தங்கள் கையில் வைத்துக்கொண்டு, எல்லாவிதமான செல்வங்களையும் அனுபவித்துக்கொண்டு விவசாயியையும் அவனது குடும்பத்தையும் அவனுடைய நிலத்தில் இருந்து விரட்டி அவனை வேலையில்லாத் திண்டாட்டத்திலும் ஏழ்மையிலும் தள்ளுகிறார்கள் என்பதை வெளிப்படையாக அவர்களுக்குக் காட்ட வேண்டும்.

 யார் கிராமப்புறத் தொழிலாளர்களை, கைத்திறன் தொழிலாளர்களை, வரியின் மூலம் திறையின் மூலம், அதிகமான வாடகை மூலம், நிற்க முடியாத அளவு போட்டியின் மூலம் அழிக்கிறார்கள். உழைக்கும் படிப்பாளிக் கூட்டத்தின் விரிவானப் பகுதியை எல்லாம் யார் தெருவில் தள்ளி விரட்டுகிறார்கள். 

யார் அவர்களுடைய வேலையைப் பறித்து அவர்களைத் திண்டாட விடுகிறார்கள் என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும். 

பொறுமையுடனும் விடாப்பிடியாகவும் விளக்க வேண்டும். 

பாசிஸ்ட் எதிர்ப்பு மக்கள் முன்னணியை உருவாக்குவதில் அடிப்படையான ஒன்று உழைக்கும் விவசாயிகளுடையக் கோரிக்கைகளுக்காக, பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை நலவுரிமை கோரிக்கைகளுக்கு இணையாகத் தொழிலாளி வர்க்கம் தங்களுடைய கோரிக்கைகளுக்கானப் போராட்டத்துடன் இணைத்து புரட்சிகரமானப் பாட்டாளி வர்க்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாசிஸ்ட் எதிர்ப்பு மக்கள் முன்னணியை அமைக்கும் போது உழைக்கும் விவசாயிகளும் நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்துள்ள அமைப்புகளுடனும், கட்சிகளுடனும் ஒரு சரியான அணுகு முறையைக் கடைபிடிப்பது மிகவும் அதிகமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

முதலாளித்துவ நாடுகளில் உள்ள கட்சிகள், அமைப்புகள் பொருளாதார அமைப்புகலாயினும், அரசியல் அமைப்புகளாயினும் அவற்றில் பெரும்பாலானவை இன்னும் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலேயே இருந்து அவர்களையே பின்பற்றுகிறார்கள். இந்த கட்சிகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் சமூதாய சேர்க்கை பலதரப்பட்ட முரண் கூறுகளை உடையதாகும். அவர்களில் பெரிய பணக்கார விவசாயிகளுடன் நிலமில்லாத விவசாயிகளும் இருக்கிறார்கள். பெரிய வனிகர்களோடு சேர்ந்து சிறு கடைக்காரர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதில் ஆதிக்கம் வகிப்பவர்கள் மேல்தட்டுகாரர்கள்தான். அவர்கள் பெருமுதலாளிகளின் ஏஜெண்டுகளாகவே இருக்கிறார்கள். 

இதன் காரணமாய் இந்த அமைப்புகளை பல்வேறு வழிகளில் அணுக வேண்டியிருக்கிறது. அவர்களின் தலைவர்களின் உண்மையான அரசியல் குணாம்சங்களைப் பற்றி  எதுவும் அறிய மாட்டார்கள் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தக் கட்சிகளையும் அமைப்புகளையும் அல்லது அவற்றின் சில பகுதிகளையாவது, முதலாளித்துவ தலைமையில் இருந்த போதிலும், பாசிஸ்டு எதிர்ப்பு மக்கள் முன்னணியின் பக்கத்திற்குக் கொண்டு வருவதற்கு நாம் முயற்சி செய்ய முடியும், முயற்சி செய்ய வேண்டும். 

உதாரணமாக பிரான்சில் ரேடிக்கல் கட்சியுடன், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பல்வேறு விவசாயிகளின் அமைப்புகளுடன், போலந்தில் ஸ்ட்ரோனிக் டூலுடோவி அமைப்புகளுடன், யுகோஸ்லெவியாவில் குரோசியன் விவசாயிகள் கட்சியுடன், பல்கேரியாவில் விவசாயிகள் லீக்குடன் கீரிசில் விவசாயிகள் கட்சியுடன் அவ்வாறு அணுகவேண்டும்.    

நமது செயல் எல்லா சூழ்நிலைமைகளிலும் சிறு விவசாயிகள், கிராமப்புற தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள் அவர்களின் உறுப்பினர்கள், நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ மக்கள் கூட்டம் ஆகியோரைப் புறக்கணிக்கும் போக்கிற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மேலும் அவர்களைப் பாசிஸ்டு எதிர்ப்பு மக்கள் முன்னணியில் கொண்டுவருவதற்கானத் திசை வழியில்தான் செல்ல வேண்டும்.

தனிப்பட்ட நாடுகளில் ஐக்கிய முன்னணி பற்றிய மிக முக்கியப் பிரச்சனைகள்:

ஒவ்வொரு நாட்டிலும் சில முக்கிய உயிர் நாடியான பிரச்சனைகள் இருக்கின்றன. அவை மிகப் பெரும்பான்மையான மக்களுடைய உள்ளங்களில் உறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினையாக உள்ளன. அத்தகையப் பிரச்சினைகளைச் சுற்றி ஐக்கிய முன்னணியை நிறுவுவதற்கானப் போராட்டத்தை உருவாக்கி வளர்க்க வேண்டும். இதைச் சரியாகப் புரிந்து கிரகித்து கொண்டோமானால் ஐக்கிய முன்னணியை நிறுவுவதை உறுதிப்படுத்தும், துரிதப்படுத்தும்.

அமெரிக்க ஐக்கியநாட்டில் பாசிசம் – முதலாளித்துவ உலகத்திலேயே ஒரு முக்கியமானதாக இந்த நாடு இருக்கிறது. அங்கு  நெருக்கடியின் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் செயலில் இறங்கி உள்ளார்கள். முதலாளித்துவத்தை மீண்டெழச் செய்வதற்கானத் திட்டம் கவிழுந்துவிட்டது. பெரிய மக்கள் பகுதி முதலாளித்துவக் கட்சிகளை கைவிடத் தொடங்கி இப்போது முச்சந்தியில் நிற்கிறார்கள். 

தொடக்க நிலையில் உள்ள அமெரிக்கப் பாசிசம், மக்களிடம் உள்ள இந்த அதிருப்தியையும், மீட்சியையும் பிற்போக்குப் பாசிஸ்டு வழிகளில் திருப்புவதற்கு முயற்சித்கொண்டிருக்கிறது. 

அமெரிக்க பாசிசத்தின் வளர்ச்சியின் தனித்தன்மை என்னவென்றால், பாசிசத்திற்கு எதிரானச் சக்தி என்ற வடிவத்தில் முன்னுக்கு வருகிறது. பாசிசம் அமெரிக்கத் தன்மையற்றது என்றும், அன்னியத் தன்மைக் கொண்டது என்றும், இறக்குமதிச் சரக்கு என்றும்கூடக் கூறி அதன் மீது குற்றம் சுமத்துகிறது. அரசியல் சாசன முறைகளுக்கு எதிரான முறையில் செயல்படும் ஜெர்மன் பாசிசத்திற்கு எதிரான முறையில் அமெரிக்க பாசிசம் தன்னை அரசியல் சாசனத்தின் அமெரிக்க ஜனநாயகத்தின் பாதுகாவலனாகத் தன்னை வர்ணித்துக் கொள்ள முயல்கிறது. நேரடியானப் பேரபாயம் நிறைந்தச் சக்தியாக அது இன்னும் தன்னைக் காட்டிக்கொள்ள வில்லை. 

ஆனால் பழைய முதலாளித்துவக் கட்சிகளின் மீது பிரம்மை அகன்றுள்ள விரிவான மக்கள் பகுதியில் ஊடுருவதில் வெற்றிப் பெற்றுள்ளது. அது வெகு விரைவில் மிக அபாயகரமானச் சக்தியாக ஆகக் கூடும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பாசிசம் வெற்றி பெருமானால் ஹங்கேரி, பின்லாந்து, பல்கேரியா உள்ளிட்டு  அது உலக நிலைமை முழுவதையுமே வெகுவாக மாற்றி விடும்.

அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தின் நல உரிமைகள் கோறுவது என்னவென்றால் அதன் சக்திகள் எல்லாம் உடனடியாகக் காலதாமதமின்றி முதலாளித்துவக்  கட்சிகளிடம் இருந்து விலக வேண்டும். அதிர்ப்தி அடைந்துள்ள உழைக்கும் மக்கள் கூட்டத்தைப் பாசிசம் தங்கள் பக்கம் திரும்புவதைத் தடுக்க வேண்டும். 

அமெரிக்கச் சூழ்நிலைமைகளில்  உழைக்கும் மக்களுடைய ஒரு வெகுமக்கள் கட்சியை ஒரு தொழிலாளர் விவசாயக் கட்சியை உருவாக்குவது. அது முதலாளித்துவ டிரஸ்டுகள், ஏகபோக முதலாளிகள், பாங்குகளின் கட்சிகளின் எதிர்க்கட்சியாகவும், வளர்ந்து வரும் பாசிசத்திற்கு எதிராகவும் இருக்கும். அத்தகைய ஒரு கட்சி சோசலிஸ்ட் கட்சியாகவோ, கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருக்காது. ஆனால் அது ஒரு பாசிஸ்ட் எதிர்ப்புக் கட்சியாக இருக்க வேண்டும். 

கம்யூனிஸ்ட் எதிர்ப்புக் கட்சியாக இருக்கக் கூடாது. இந்தக் கட்சியின் வேலைத்திட்டம் வங்கிகள், டிரஸ்டுகள், ஏகபோக முதலாளிகளுக்கு எதிராக இருக்கும். மக்களின் பிரதான எதிரிகளுக்கு எதிராக இருக்கும்.  உண்மையானச் சமுதாய சட்டங்களுக்குகாக, வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்து காப்பீடு கிடைக்கப் போரடவதாக இருக்கும். 

வெள்ளை, கருப்பு நிற வாரவிவசாயிகளுக்கு நிலம் கிடைக்கவும், கடன் சுமையில் இருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கவும் போராடுவது, நீக்ரோ மக்களுக்கு சம அந்தஸ்துக்காகப் போராடுவது, முன்னாள்  ராணுவத்தினரின் கோரிக்கைகளைப் பாதுகாப்பது, பல்வேறு தொழில் செய்யும் பிரிவினர்கள், சிறு உரிமையாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகளைப் பாதுகாக்கக் கூடியக் கட்சியாக இருக்க வேண்டும்.

ஒரு தொழிலாளர் விவசாயிகள் கட்சியை உருவாக்குவது அதன் வேலைத்திட்டங்களை தயாரிப்பது ஆகியவற்றை பொதுமக்களின் பெரியக் கூட்டங்களில் வைத்தே விவாதிக்க வேண்டும். அத்தகைய ஒரு கட்சியை உருவாக்குவதற்கு ஒரு பெரிய இயக்கத்தை நடத்த வேண்டும் அதில் நாம் முன்கை எடுத்துத் தலைமைத் தாங்க வேண்டும்.

தொடரும்...

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.