ஐக்கிய முன்னணி தந்திரம் நூல் பாகம் - 6

சமூக ஜனநாயகவாதிகள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள நாடுகளில் ஐக்கிய முன்னணி:



அரசு அதிகாரத்தில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சிகள் அல்லது சோஷலிஸ்டுகளும் உள்ளிட்ட கூட்டரசாங்கம்  உள்ள நாடுகளில், உதாரணமாக டென்மார்க், நார்வே, ஸ்வீடன், செக்கோஸ்லோவியா, பெல்ஜியம் முதலிய நாடுகளில் எவ்வாறு ஐக்கிய முன்னணி கட்டுவது.

சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள் முதலாளித்துவ வர்க்கங்களுடன் சமரசம் செய்து கொண்டிருக்கும்  அரசாங்கள் என்ற முறையில் அவற்றிற்கு முழுமையான எதிர்ப்புக் கொடுக்கும் அணுகுமுறை அனைவரும் அறிந்தவொன்று. ஆனால், அது எப்படி இருந்தாலும் ஒரு சமூக ஜனநாயக அரசாங்கம் அல்லது முதலாளித்துவக் கட்சிகளோடுச் சேர்ந்த கூட்டரசாங்கம் இருப்பது சமூக ஜனநாயகவாதிகளுடன் சில பிரச்சினைகளில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்குகான கடந்து செல்ல முடியாதத் தடை என்றுக் கருத முடியாது.

இத்தகைய இடங்களில்கூட உழைக்கும் மக்களின் நல உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய முன்னணி சாத்தியமும் அவசியமும் ஆகும் என்று நம்புகிறோம்.

சமூக ஜனநாயகக் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் பங்கு கொள்ளக் கூடிய நாடுகளில் சமூக ஜனநாயகத் தலைவர்கள் பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணிக்கு மிகப் பலமான எதிர்ப்பைக் கொடுப்பதற்குக் காரணம் இருக்கிறது. திறமையாக அதிருப்தி அடைந்துள்ள தொழிலாளிவர்க்க மக்களைத் தங்களுடையப் பிடியில் வைத்துக் கொண்டு கம்யூனிசத்தின் செல்வாக்கின் கீழ் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்க முடியும் என்று அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்திற்குக் காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். 

ஸ்காண்டிநேவிய நாடுகளில் உள்ள நமது தோழர்கள் சமூக ஜனநாயக அரசுகளை அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தை மட்டும் செய்து கொண்டு தங்களைக் குறுக்கிக் கொள்கிறார்கள். இது தவறாகும். 

டென்மார்க்கில் சமூக ஜனநாயகத் தலைவர்கள் கடந்தப் பத்தாண்டுகளாக அரசாங்கத்தில் இருக்கிறார்கள். இந்தப் பத்தாண்டுகளிலும் நாள் தவறாமல் அந்த அரசு ஒரு முதலாளித்துவ அரசு என்று கம்யூனிஸ்டுகள் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  

டேனிஷ் சமூக ஜனநாயக அரசு நெருக்கடி ஒப்பந்தம் என்ற நடவடிக்கை மூலம் முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும்தான் உதவியது, 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமைப் பறிப்பு, ஜனநாயக விரோதத் தேர்தல் சீர்திருத்தத் திட்டம். ஆகிய தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் ஏராளமாக இருப்பினும் அவர்களில் பெரும்பான்மையினர் சமூக ஜனநாயகக் கட்சிக்குத்தான் ஓட்டளிகிறார்கள். அது எதைக் காட்டுகிறது என்றால் கம்யூனிஸ்டுகள் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் அரசை அம்பலப்படுத்துவது போதுமானதல்ல என்பதையேக் காட்டுகிறது. 

ஸ்வீடனில் ஒரு சமூக ஜனநாயக அரசு மூன்றாவது முறையாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் ஸ்வீடன் கம்யூனிஸ்டுகள் கோட்பாட்டில் ஐக்கிய முன்னணிக்காவே நிற்கிறார்கள். பொதுவாக ஒரு ஐக்கிய முன்னணிக்காவே நிற்கிறார்கள். ஆனால் எந்த சூழ்நிலைமைகளில், எந்தப் பிரச்சனைகளில், என்னக் கோரிக்கைளை உரிமைகளை பாதுகாப்பதற்காக ஒரு பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும். எங்கே, எவ்வாறு வெட்டி இழுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் தவறிவிட்டார்கள்.  

1932 இல் சமூக ஜனநாயகக் கட்சி தேர்தல் காலத்தில் சுங்க வரிகளுக்கு எதிராக, இராணுவ மயமாக்கப்படுவதற்கு எதிராக, வேலை இல்லாத் திண்டாட்ட காப்பீடு பிராச்சனையில் தாமதபடுத்தும் கொள்கைக்கு முடிவுகட்டுவது,  போதுமான வயோதிகக் கால பென்ஷன் கொடுக்க வேண்டும், ஒரு பாசிஸ்ட் அமைப்பான மூனிச்படை  போன்ற அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும், முதலாளித்துவக் கட்சிகள் கோறும்படி சங்கங்களுக்கு எதிரான வர்க்க சட்டங்களை ஒழிப்பது  முதலிய முழக்கங்கள் வைக்கப்பட்டது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட உழைக்கும் மக்கள் அந்தக் கோரிக்கைகளுக்காக ஓட்டளித்தார்கள். அவர்களுடைய அந்தக் கோரிக்கைகள் இப்போது நிறைவேறும் என்றும் நம்பினார்கள்.

சமூக ஜனநாயகக் கட்சி முன்வைத்த அந்தக் கோரிக்கைகளை அடைவதற்கு ஒரு கூட்டு நடவடிக்கை எடுக்கும்படி சகல சமூக ஜனநாயகத் தொழிற்சங்க அமைப்புகளையும் முன் வரும்படி கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுவதைக் காட்டிலும் ஒரு ஐக்கிய முன்னணியில் ஒன்று படுத்தி இணைப்பதில் வெற்றிப் பெற்றிருப்போமானால் ஸ்வீடன் நாட்டில் தொழிலாளி வர்க்கம் மிகப் பெரும் அளவில் சாதனைகள் புரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தொழிற்சங்களுக்கு எதிராகச் சகல சட்டங்களை நிராகரிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட கடைசி பிரச்சனையில் கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணி என்ற உணர்வில் ஒரு நல்ல வெகுமக்கள் இயக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அதனால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

நார்வே நாட்டுக் கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் கட்சிகளுக்கு கூட்டாக மே தின ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் பலக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஒன்று சேர்ந்து வரும் படி வேண்டுகோள் விட்டது மிகவும் சரியானதாகும். ஒரு ஐக்கிய முன்னணிக்கு மிக சாதகமான இந்த நடவடிக்கைக் குறைந்த அளவிலே இருப்பினும், நார்வே தொழிலாளர் கட்சித் தலைமை இந்த ஐக்கிய முன்னணிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் ஐக்கிய முன்னணி ஆர்பாட்டங்கள் 30 இடங்களில் நடைபெற்றனர்.  சமூக ஜனநாயகவாதிகள் முன்வைக்கக் கூடிய ஒவ்வொரு பகுதி கோரிக்கைகளுக்கும் ஈடாக அதைக் காட்டிலும் இரு மடங்கு தீவிரமாக மற்றொரு கோரிக்கைகளை வேகமாக முன் வைக்காவிட்டால் அது நமது பக்கம் சந்தர்ப்பவாதம் ஆகிவிடும் என்று முன்பு பல கம்யூனிஸ்டுகள் பயப்பட்டதுண்டு. இது ஒரு அப்பாவித்தனமான தவறாகும். சமூக ஜனநாயகவாதிகள் பாசிஸ்ட் அமைப்புகள் கலைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தால் நாம் அதற்கு அப்பால் சென்று அரசாங்க போலீஸ் படையையும் கலைக்க வேண்டும் என்று சேர்த்து கோரிக்கையை அதிகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக உங்கள் கட்சியின் இந்தக் கோரிக்கையைப் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி கோரிக்கையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றும்  போராட்டத்திற்கு ஒன்று சேர்ந்து கைக் கோர்த்து நிற்போம் என்றும் கூற வேண்டும்.

செக்கோஸ்லோவியாவிலும் செக் மற்றும் ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளும் சில சீர்திருத்தவாதத் தொழிற்சங்களும் வேலை இல்லாதோருக்கு வேலை வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகங்களின் அதிகாரங்களைக் குறிக்ககூடாது என்றும் கோரிக்கைளை முன்வைக்கும் போது, ஒரு தொழிலாளர் வர்க்க ஐக்கிய முன்னையை கட்டுவதற்கு இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது சமூக ஜனநாயகக் கட்சிகள் அரசாங்க எந்திரத்தில் உள்ள பாசிஸ்ட் ஏஜெண்டுகளை எதிர்த்து பொதுவான வார்த்தைகளில் மட்டும் இடி முழக்கம் செய்து ஆவேசமாகப் பேசினால் நாம் செய்ய வேண்டியது ஒவ்வொரு குறிப்பிட்ட மாவட்டத்திலும் உள்ள பாசிஸ்ட்களையும் வெளிப்படுத்தி அம்பலப்படுத்திக் கொண்டுவந்து சமூக ஜனநாயகத் தொழிலாளர்களுடன் சேர்த்து கொண்டு அத்தகையப் பாசிஸ்டுகளின் அரசு பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி கிளர்ச்சி நடத்த வேண்டும்.

பெல்ஜியத்தில்  சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் எமிளிவாண்டர்வில்டித் தலைமையில் ஒரு கூட்டரசாங்கத்தில் சேர்ந்துள்ளார்கள். முந்திய அரசாங்கம் 150 பிற்போக்கான அவசர சட்டங்களை நிறைவேற்றியது. உழைக்கும் மக்கள் மீது கடுமையான பளுவைச் சுமத்திலிருந்து அந்த சட்டங்கள் உடனடியாக மாற்றபட்டு விடும் என்று சோசலிட் கட்சியால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் புதிய அரசாங்கம் அப்படி எதையும் செய்யவில்லை.

சமூக ஜனநாயகக் கட்சியான சோசலிட் கட்சி அமைச்சர்கள் தி மான் திட்டத்தின் அடிப்படையில் முதலாவதாகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளித்தாக வேண்டும். தொழில் முதலாளிகள், வங்கிகள் ஆகியவற்றில் நிலைமையை  அபிவிருத்திச் செய்வது அதன் பின்னர் தொழிலாளர் நிலைமைகளை அபிவிருத்திச் செய்ய முடியும் என அறிவித்து விட்டார்கள்.

 வங்கியாளர்களுக்கு ஏற்கனவேத் தங்கமழைப் பொழிந்து தங்கத்தைப் பெருக்கி வைத்துக் கொண்டுள்ளார்கள். கூலிவாங்கும் தொழிலாளர்கள் வங்கிகளில் போட்டுள்ளப் பணத்தைக் கொண்டுதான் இதைச் செய்துள்ளார்கள். மேலும்  தொழிலாளர்களுக்கானப் பல நல்ல அம்சங்களையும் இந்த மான் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது வேலை நேரக் குறைப்பு, கூலியை ஒழுங்குபடுத்திச் சீரமைப்பது, ஒரு குறைந்தபட்சக் கூலி, ஒரு சமூக காப்பீடுத் திட்டம் உருவாக்குதல், புதிய வீடுகள் கட்டுதல் என இன்னும்  இம்மாதிரியானப் பல வாக்குகள் கொடுக்கபட்டுள்ளன. 

இந்தக் கோரிக்கைகளைக் கம்யூனிட்ஸ்களாகிய நாமும் ஆதரிக்கக் கூடியதுதான். தொழிற்சங்க அமைப்புகளுக்கு நாம் சென்று முதலாளிகளுக்குப் போதுமான அளவை விட இன்னும் அதிகமாகக் கிடைத்து விட்டது. இப்போது சமூக ஜனநாயக அமைச்சர்கள் தொழிலாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும் என்று நாம் கோருவோம். நம்முடைய நலவுரிமைகளை வெற்றிகரமாகப் பாதுகாப்பதற்காக ஒரு ஐக்கிய முன்னணியில் ஒன்று சேருவோம் என்று முன்வைக்க வேண்டும்.  

இவாறாக சமூக ஜனநாயக அரசுகள்கள் உள்ள நாடுகளில் கம்யூனிஸ்ட்கள் சமூக ஜனநாயக அமைப்புகளின் கோரிக்கைப் பிரகடனங்களிலிருந்தே தனிப்பட்ட சரியான கோரிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அவற்றை சமூக ஜனநாயகக் கட்சிகள் அமைப்புகளுடன் கூட்டு நடவடிக்கைக்கான ஆரம்பப் புள்ளியாகப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் முதலாளித்துவத் தாக்குதல்களை எதிர்த்தும், பாசிசத்தை எதிர்த்தும் யுத்த பயன்படுத்தலுக்கு எதிராகவுமானப் போராட்டத்தில் இதர வெகுமக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான ஒரு இயக்கத்தைச் சுலபமாக உருவாக்கி வளர்க்க முடியும்.

கம்யூனிசத்தின் வேலைத் திட்டத்தையும் முழக்கங்களையும், சமூக ஜனநாயகத் தொழிலாளர்களிடம் இடைவிடாமல் ஓய்வின்றி தோழமைப் பூர்வமாக விளக்கிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். சமூக ஜனநாயக அரசு உள்ள நாடுகளில் இந்தக் கடமை ஐக்கிய முன்னணிக்கானப் போராட்டத்திற்கேக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தொடரும்....

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.