அன்பார்ந்த வாசகத் தோழர்களே!

வினை செய் முகநூல் பக்கம் மற்றும் வலைப்பக்கம் ஆகியவற்றில் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வருகிறோம்.

சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தை கிளர்ந்தெழச்செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு இருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை சமூக வலைதளங்களில் தீராத குழுச் சண்டைகள், தனிநபர் தாக்குதல்கள், வசவுகள், துதி பாடல்கள் போன்றவையே கோலோச்சுகின்றன. தவிர்க்க முடியாமல் சில சமயங்களில் நாங்களும் அத்தகைய சண்டைகளில் இறங்க வேண்டியுள்ளது. சாக்கடையை சுத்தம் செய்ய மூக்கை பிடித்துக் கொண்டு சாக்கடைக்குள் இறங்குவதைப் போல சில சமயம் தவிர்க்க இயலாமல் செய்ய வேண்டியுள்ளது.

பொதுவாக பழங்காலத்தில் ஊர் செய்திகளை அறிந்து கொள்வதற்கு தெரு முக்கூட்டில் அல்லது ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு திண்ணை வேதாந்தம் பேசுவதன் மூலம் ஒருவரை ஒருவர் சொரிந்து கொண்டும், புகழ்ந்து கொண்டும், உழைப்பில் ஈடுபடாமல் வம்பு பேசி திரியும் சிலர் பேசி, பேசி நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொருவரும் கையில் ஒரு செய்தியை கொண்டு வந்து பேசி ஊர் பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு பிடி பிடிப்பார்கள். அது போலவே சமூக வலைதளங்கள் என்று சொல்லப்படும் முகநூல் பக்கம், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு கம்பெனிகளிடமிருந்து தனிநபர் தாக்குதல்கள், சமூகத்தை நேசிக்கின்ற போராடுகின்ற இயக்கங்களை பற்றிய அவதூறுகள், வசவுகள், இழிதகமை கொண்ட பொய்ப் புரட்டுகள் வாரி வீசப்படுகிறது.

இத்தகைய திருப்பணியில் புரட்சிகர அமைப்பில் தாக்குப் பிடிக்க முடியாமல் அற்ப சொந்த வாழ்க்கையை நோக்கி ஓடிய சிலர், குரங்கு கூட்டத்தில் கீழே விழுந்த குரங்கு குச்சியை எடுத்து வைத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்வதைப் போல அமைப்புகளின் மீதும் அதில் செயல்படுபவர்களின் மீதும் செறடிப்பதன் மூலம் தனது தோலை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு சமூக அக்கறையுடன் செயல்படுகிறது வினை செய். 

மூலதனம், பல்வேறு தொழில்நுட்ப வசதிகள், பிரபலங்கள் என்ற ஒளி வட்டம் போன்ற எதுவும் இல்லாமல் சமூக விடுதலைக்காக குரல் கொடுக்கும் வினை செய் பக்கத்தை ஆதரியுங்கள். அது மட்டுமின்றி புதிய நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

“கருத்து மக்களைப் பற்றிக் கொள்ளும் போது பௌதீக சக்தியாக உருவெடுக்கிறது” என்றார் காரல் மார்க்ஸ். அந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து களமாடுகிறோம். 

ஆதரியுங்கள்!

படியுங்கள்!!

பரப்புங்கள்!!!


தோழமையுடன்,

ஆசிரியர் குழு,

வினை செய்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.