ஈராக்கில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தியாகிகள் தின நினைவேந்தல் கூட்டம்;


இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கின்ற தாலிபன்கள் ஆட்சி நடக்கின்ற ஆப்கானிஸ்தான் முதல் அமெரிக்க  கைக்கூலிகள் ஆட்சி நடத்தும் ஈரான் வரை அனைத்திலும் பெண்கள் மீது இஸ்லாமிய மத ரீதியிலான வன்முறைகள், ஆணாதிக்க வெறியாட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.




ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள் மீது கடும் அரசபயங்கரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

இளம் வயதில் மத அடிப்படைவாதத்திற்கு எதிராகப் போராடுகின்ற இஸ்லாமிய மாணவிகளுக்கு விஷம் கொடுத்து மெல்ல மெல்லக் கொல்ல வைப்பது போன்ற கொடூரமான பயங்கரவாத செயல்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

இந்தியாவில் மார்க்சிய போர்வையில் உலவுகின்ற பல்வேறு குட்டி முதலாளித்துவ கும்பல் மனதிற்குள் சாதி மற்றும் இனவெறியுடன் நடந்து கொள்வதும், வெளியில் பகட்டாகக் கம்யூனிசம் சோஷலிசம் எனப் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் ஈராக்கில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தியாகிகள்  நினைவேந்தல் நமக்கு புதிய உத்வேகத்தைத் தருகிறது.

இந்து என்ற போர்வையில் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை நிபந்தனையின்றி ஏற்க வைப்பதற்கு அலைந்து கொண்டிருக்கும் ஆர் எஸ் எஸ் போன்ற பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வது கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே என்பதை மீண்டும் நிறுவ வேண்டியுள்ளது.

எதிரிகளுடன் சமரசமின்றி போராடுகின்ற, திருத்தல்வாத அமைப்புகளை திரைகிழித்து சித்தாந்த ரீதியாக உறுதியுடன் போராடுகின்ற, நாடு தழுவிய ஒன்றிணைந்த மார்க்சிய- லெனினிய அமைப்பை உருவாக்குவோம்.

ஆசிரியர் குழு,

வினை செய்.

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.