மே தினத்தை அரசியல் ஆர்ப்பாட்ட போராட்ட தினமாக களமாடுவோம்!

மே தினத்தை அரசியல் ஆர்ப்பாட்ட போராட்ட தினமாக அறிவித்து பாட்டாளி வர்க்கத்தை தனது அரசியல் கோரிக்கைகளுக்காக கிளர்ந்து எழச் செய்யும் வகையில் வழிகாட்டினார் தோழர் லெனின்.

முதலாவது மே தின போராட்டத்தின் போது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கிளர்ச்சிக்கு உலகம் முழுவதும் திரண்டு கொண்டிருக்கிறார்கள் என்று பெரும் உவகையுடன் எழுதினார் தோழர் ஏங்கெல்ஸ்.

மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 1993 முதல் மே தினத்தை "நாடு மறுகாலனியா வதை முறியடிப்போம்!" "பார்ப்பன (இந்து) மத வெறி பாசிசத்தை முறியடிப்போம்!" என்ற தனது அரசியல் செயல் தந்திரத்தை பரந்துபட்ட மக்களிடம் கொண்டு செல்லும் போராட்ட தினமாக அறிவித்து பல்வேறு கிளர்ச்சிகரப் போராட்டங்களை நடத்தியது.

வழக்கமாக இடதுசாரி அமைப்புகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கொடியேற்றி மிட்டாய் வழங்கக்கூடிய காலகட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தை தனது அரசியல் பிரச்சாரத்திற்கு மே தினத்தை பயன்படுத்துகின்ற முன்னுதாரணமிக்க செயல்பாட்டை முன்வைத்தது மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள்.

நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சி போக்கு பற்றி அவதானித்து 2015 முதல் அரசியல் செயல் தந்திரத்தின்  முழக்கமாகவும் மக்கள் அதிகாரம் என்ற மக்களே அதிகாரத்தை கையில் எடுக்கின்ற அமைப்பை கட்டி புரட்சியை முன்னெடுத்தும் செயல்பட்டு வரும் புரட்சிகர அமைப்புகள் இந்த ஆண்டு மே தினத்தை அதானி அலுவலக முற்றுகை என்று அறிவித்துள்ளது.

கார்ப்பரேட் காவி பாசிசம் நாட்டை ஏறி தாக்கி வரும் இந்த சூழலில் பாட்டாளி வர்க்கத்தை கிளர்ச்சிகரமான போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து மக்களை அணி திரட்டும் மகத்தான கடமையில் ஈடுபட்டு வருகிறது மக்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள்.

மே தினத்தின் வரலாற்றை ஏற்கனவே எமது இணையதளத்தில் வெளியிட்டு இருந்தோம் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் கருதி தொடராக மே தின வரலாற்றை வெளியிடுகிறோம்.

படியுங்கள்!

பரப்புங்கள்!


தோழமையுடன்,

ஆசிரியர் குழு,

வினை செய்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.