‘குடி பொறுக்கிகளும்?’, மேட்டுக்குடி பொறுக்கிகளும்!

மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமான மஞ்சுமோல் பாய்ஸ் என்ற திரைப்படம் கேரளா தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் வேறு சில மாநிலங்களிலும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் ஈட்டி வருகிறது.


உடனே பொறுக்க மாட்டாத பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன அடி வருடிக் கும்பலும் இணைந்து கொண்டு படத்தை பற்றி எதிர்மறையான கருத்துக்களை பரப்பத் துவங்கினர். அதில் முக்கியமானது தமிழ் திரையுலகில் வசனம் எழுதிப் பிழைக்கும் கருப்பு பார்ப்பனர்களில் ஒருவரான ஜெயமோகன்  அந்த திரைப்படத்தில் குணா குகை மற்றும் கொடைக்கானலுக்கு செல்கின்ற இளைஞர்கள் குடிப்பதை பற்றி குறிப்பிட்டு குடி பொறுக்கிகள் என்று விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்தை தமிழ் எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.



குடிபொறுக்கிகளை விமர்சிப்பது இருக்கட்டும். ஜெயமோகன் வகையறாக்களின் புரலவர்கள் ஆன மேட்டுக்குடி பொறுக்கிகள் கடந்த ஒரு வாரத்தில் செய்த அட்டூழியங்கள் என்ன தெரியுமா!


முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர் ராதிகா மெர்சண்ட் என்பவரை திருமணம் செய்யப்போகிறார். இந்த திருமணத்திற்கு முன்பாக தற்போது pre event marriage என்ற பெயரில் திருமணத்திற்கு டிரையல் பார்த்துள்ளனர்.


1500 கோடி ரூபாய் செலவில் 2000 பேர் கலந்து கொள்கின்ற இந்த கேடுகெட்ட ஊதாரித்தனமான நிகழ்வுக்கு திரைப்பட பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் முதல் உலகப் பணக்காரர்கள் வரை அனைவரையும் அழைத்துள்ளனர். விழாவில் 2000 வகையான உணவு பொருட்கள், ஒரு முறை தயாரிக்கப்பட்டது, மீண்டும் தயாரிக்க கூடாது என்ற நிபந்தனை போன்றவை அனைத்தையும் உள்ளடக்கி அருவருப்பான நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.


இந்த நிகழ்விற்கு அமெரிக்க பாசிச கும்பலின் தலைவனான அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், மகள் டிவாகா ட்ரம்ப், டாடா குழும தலைவர் சந்திரசேகரன், கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக்,  டிஸ்னி தலைமை நிர்வாக அதிகாரி பாப் ஈகர், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மெட்டா நிறுவனர் மார்க் ஜூகன் பெர்க் மற்றும் அவரின் மனைவி பிரிஸில்லா உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் முதலாளிகளும், அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.


அதே போன்று பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் குடும்பம், ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே ஜோடி, நடிகர் சைப் அலிகான் மற்றும் அவருடைய மனைவி கரீனா கபூர், விளையாட்டு வீரர் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்க்ஷி, நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர், நடிகர் அக்ஷய் குமார்,  அமீர்கான், சல்மான்கான், போன்ற ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த அருவருப்பான நிகழ்வை கோடி மீடியாக்கள் நேரடி ஒளிபரப்பு செய்தது. குடி, கும்மாளம், பாலியல் வக்கிரங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது தான் இந்த மேட்டுக்குடி பொறுக்கிகளின் செயல்பாடு.


அதற்கு அக்கம்பக்கமாக தமிழ்நாட்டில் கோவை அருகே வெள்ளையங்கிரியில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்திலும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்ற ஆண்டு நாட்டின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார் இந்த ஆண்டு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்.



மகா சிவராத்திரி என்ற பெயரில் நடந்த இந்த ஆபாச வக்கிர காம களியாட்டங்களில் நாடு முழுவதும் இருக்கும் அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோரும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு ஜக்கி வாசுதேவ் உடன் சேர்ந்து ஆபாச, வக்கிர நடனமாடினர்.


குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவரது துணைவியார் டாக்டர். சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.


இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் டிக்கெட் எடுத்து கலந்து கொள்ள வேண்டும் அந்த அனுமதி சீட்டு இருந்தால்தான் விழாவிற்கு உள்ளேயே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஈஷாவின் இணையதளம் அறிவித்திருந்தது. இந்தியாவில் ஓடும் நதிகளை இழிவுபடுத்துகின்ற வகையில் கீழ்கண்ட கட்டணங்களையும் தீர்மானித்தனர்.


கங்கா – ரூ.50,000

யமுனா – ரூ.25,000

மகாநதி – ரூ.10,000

நர்மதா – ரூ.5000

பிரம்மபுத்திரா – ரூ.2500

கோதாவரி – ரூ.1000

காவேரி – ரூ.500

தபதி – ரூ.250

தாமிரபரணி – ரூ.0


இந்த கட்டணங்களை கொடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் மகாசிவராத்திரி என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆபாச வக்கிர காம களியாட்டங்களில் கலந்து கொண்டு ஆட்டம் போடுவது துவங்கி அனைத்து வகையான கிருஷ்ண லீலைகளிலும் ஈடுபட்டனர்.


மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவர்களுக்கு கை மேல் பலன் என்ற முறையில் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கொட்டியுள்ளது.


நாட்டின் பெரும்பான்மை மக்கள் வறுமையிலும் பசி பட்டினியிலும் வேலையில்லா திண்டாட்டத்திலும் இனரீதியான படுகொலைகளிலும் தாழ்த்தப்பட்டிருக்கும் இந்த வேளையில் ரோம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த கதையாக நவீன நீரோக்களான மேட்டுக்குடி பொறுக்கிகள் இத்தகைய ஆபாச கூத்துகளில் கலந்து கொண்டுள்ளனர்.


இவையெல்லாம் பக்தி என்ற பெயரிலும், பணக்காரர் வீட்டு திருமணம் என்ற பெயரிலும் நியாயப்படுத்தப்படுகிறது. டாஸ்மாக்கில் குடிப்பவன் குடி பொறுக்கி என்று வசைபாடுவதற்கு துடிதுடிக்கும் ஜெயமோகன் வகையறாக்களின் நாவு இது போன்ற மேட்டுக்குடி பொறுக்கிகளின் குடி, குட்டி, கூத்து பற்றி பேச மறுப்பது ஏன் என்பது பளிச்சென்று தெரியவில்லையா.


காசுக்கு பீ தின்னும் பன்றிகளான இப்படிப்பட்ட கழிசடைகளை இன்னமும் எழுத்தாளர்கள் என்று தூக்கி சுமப்பது தேவையா?


சண்.வீரபாண்டியன்.


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.