பார்ப்பன பயங்கரவாதி அத்வானிக்கு பாரத ரத்னா விருது! வெட்கக்கேடு!

பாபர் மசூதி இடிப்பை முன் நின்று நடத்திய ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படையின் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி என்ற எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பாகவே ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற அரசியலை முன்வைத்து இந்தியா முழுவதும் ரத யாத்திரை நடத்தியது ஆர்எஸ்எஸ். அதில் முன்னிலை வகித்த நபர்தான் இந்த அத்வானி.

இந்த ரத யாத்திரை இஸ்லாமியர்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் எதிரான கலவரங்களை  தூண்டியது. இந்த ரத யாத்திரை ரத்த யாத்திரையாக மாறியது. படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் ரத்தத்தினாலும், அவர்களை கொன்று புதைத்து அதன் மீது ஏறி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழங்கிய பாசிச குண்டர் படை தலைவனான அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது மிகவும் ‘பொருத்தமானதுதான்.’

ஏனென்றால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க வீடின்றி தவித்துக் கொண்டிருக்கும் போது ராமனுக்கு கோவில் என்ற பெயரில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வாரி இறைத்து உள்ளனர்.

90களில் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் இந்தியாவின் மீது திணித்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க  கொள்கைகளை திசை திருப்புவதற்கு ராமனுக்கு கோவில் என்ற அரசியல் ஆர்எஸ்எஸ் க்கு பயன்பட்டது. தனியார்மயத்தின் கொடுமைகளை அனுபவிக்கின்ற விவசாயிகள், தொழிலாளர்கள் வர்க்க ரீதியாக ஒன்றுபடுவதை தடுக்க ‘இந்துத்துவா’ அரசியல் அவர்களுக்கு பயன்படுகிறது.

அப்படிப்பட்ட மக்கள் விரோத அரசியலை தனது சேவையாக செய்த அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கியது ‘பொருத்தமானதுதான்.

உண்மையில் பாரத ரத்னா விருது என்றால் என்ன?

பாரத ரத்னா – ‘இந்தியாவின் ஜூவல்’ என்பது நாட்டின் உயரிய சிவிலியன் விருது. இது அறிவியல் கலை, இலக்கியம் மற்றும் மிக உயர்ந்த வரிசையின் பொது சேவைக்கான அங்கீகாரம் போன்ற பல்வேறு துறைகளில் தேசத்திற்கான விதிவிலக்கான சேவைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது மரணத்திற்குப் பின் வழங்கப்படலாம் மற்றும் அது நிறுவப்பட்டதிலிருந்து, ஏழு விருதுகள் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விருது ஆரம்பத்தில் இலக்கியம், அறிவியல், கலைகள் மற்றும் பொதுச் சேவைகள் ஆகியவற்றில் சாதனைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் இந்திய அரசாங்கம் 2011 இல் “மனித முயற்சியின் எந்தவொரு துறையையும்” உள்ளடக்கிய நிலைமைகளை விரிவுபடுத்தியது.

1954 ஆம் ஆண்டு இந்த விருது வழங்க துவங்கப்பட்டதிலிருந்து ஆளும் வர்க்கத்திற்கு விசுவாசமான அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ஒரு சில முதலாளிகள் போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று ஆர் எஸ் எஸ் கொண்டுவர துடிக்கும் சனாதனத்தின் வேர்களை கட்டிக்காத்த ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் துவங்கி ஒரு நூற்றாண்டு காலம் இந்தியாவை சூறையாடிய டாட்டா மற்றும் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் ஆட்டக்காரன் டெண்டுல்கர் போன்றவர்களுக்கு இந்த விருந்து வழங்கப்பட்டதிலிருந்து இதன் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

2024 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் வேறு சில எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்களுக்கும் இந்த விருதுகளை வழங்கி ஆட்களை வளைத்து போட்டுள்ளது ஆர்எஸ்எஸ் பாஜக. அவர்கள் என்ன சேவை செய்து கிழித்தார்கள் என்பதைவிட அவர்களின் வாரிசுகள் தனது அரசியலுக்கு விசுவாசமாக மாறுவார்கள் அகண்ட பாரத இந்து சாம்ராஜ்யத்தை அமைப்பதற்கு பொருத்தமான அடிமைகளாக இருப்பார்கள் என்பதுதான் ஆர்எஸ்எஸ் பாரத ரத்னா விருது வழங்கும் தகுதிக்கு வைத்திருக்கும் இலக்கணமாகும்.

இந்த விருது வழங்கும் சம்பிரதாயத்தில் கூட நாட்டின் மூத்த குடிமகள் என்று அழைக்கப்படும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு-வை நிற்க வைத்து விருதை வாங்கிக் கொண்டார் திருவாளர் அத்வானி.

பெண்களையும், பழங்குடி மக்களையும், கணவனை இழந்த கைம்பெண்களையும் இழிவுபடுத்துவது எவ்வாறு என்பதை வெளிப்படையாகவே அறிவிக்கின்றது ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் மோடி கும்பல்.

இந்த கேடு கெட்டவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது. இதற்கு முன்பு பாரத ரத்னா விருது பெற்ற சூடு சொரணை உள்ளவர்கள் அந்த விருதை மத்திய அரசின் முகத்தில் விட்டெறிவதன் மூலம் பதிலடி கொடுக்க முடியும். ஆனால் செய்வார்களா?

ஆனால் தேர்தலில் பாசிச பாஜக வை தோற்கடிக்க நம்மால் முடியும் நாம், நமது குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணி புரிகின்றவர்கள், அக்கம் பக்கம் வீடுகளில் குடியிருப்பவர்கள் அனைவரையும் பாசிச பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க கோருவதன் மூலம் இதனை சாதிக்க முடியும்.

 சீராளன்.

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.