“ஜெயமோகனுக்கும் உண்மைக்கும் துளி அளவாவது சம்பந்தம் உண்டா ?

 

நண்பர்களே….

அண்மையில் (பிப்.27, 2024) எழுத்தாளர் ஜெயமோகன் அவரது வலைதளத்தில் “தமிழில் தத்துவம் உண்டா ?” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில்                          ( பொய்யுரையில் ) 

“ இந்திய தொல்நூல்களெல்லாம் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.” 

என்று கூச்சமில்லாமல் எழுதுகின்றார். அப்படி அவரால் குறிப்பிடப்படுகின்ற தொல்நூல்களில் ஒன்று கூட 18ம் நூற்றாண்டில் ஜெர்மனி மொழியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஜெயமோகனைப் பற்றி நான் முன்பு ஒரு தடவை எழுதியுள்ள கட்டுரையில், “இவர் தப்பிலும் அடிப்பார், தவிலிலும் அடிப்பார்,  கிழிந்துவிட்டால் தச்சுகிட்டும் அடிப்பார்” என்று இவருடைய குணத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். 

இத்துறையில் ஈடுபட்டு எழுதி வருகின்ற உலக அறிஞர்கள் எவரும் 18ம் நூற்றாண்டில் ஜெர்மனி மொழியில் அவ்வாறான நூல்களை வெளியிட்டதில்லை. 

இவ்வாறு உலக அறிஞர்களே துளி கூட அறியாத இத்தகைய உலக “பேரூண்மையைக்” கண்டுபிடித்த ஜெயமோகன் தன்னுடைய அரிய கண்டுபிடிப்பின் வாயிலாகத் தெரிந்த “ஜெர்மானிய நூல்கள்” சிலவற்றின் பெயர்களையாவது வெளியிட வேண்டும். 

அவ்வாறு  அவர் அந்நூல்களின் பெயர்களை வெளியிட்டு விட்டால் ஜெயமோகன் உண்மையானவர்தான் என்று தமிழ் உலகம் நம்பும்.


பொ.வேல்சாமி.

ஆய்வாளர்.

எழுத்தாளர்.

சமூக செயற்பாட்டாளர்.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.