உழைக்கும்_மக்களின்_விடுதலைக்காக_வினையாற்றுவோம்!


சமூக வலைதள நண்பர்கள், வாசகர்கள், அனைவருக்கும் வணக்கம். உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் கோடிக்கணக்கான சமூக வலைத்தள கணக்குகளில் மேலும் ஒன்றை நாங்கள் துவங்கியுள்ளோம்.


இந்திய உழைக்கும் மக்களின் கழுத்தை இறுக்கி, அவர்களை வாழ விடாமல் திணற வைத்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் சுரண்டல் ஒருபுறம், அந்த கொடூரச் சுரண்டலுக்கு துணையாக, சாதி-மத வெறியை தூண்டி மக்களை அடக்கி ஒடுக்கும் காவி பயங்கரவாதம் மறுபுறம் என இரட்டை நுகத்தடியின் கீழ் அல்லல்படும் மக்களை அதிலிருந்து மீட்க வேண்டிய கடமை இச்சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு.

அவ்வாறு சமூகத்தை நேசிக்கும் இளைஞர்கள் சிலர் இணைந்து மக்கள் சந்திக்கும் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக வினையாற்றும் வகையில் #வினை_செய் என்னும் இப்புதிய சமூக ஊடகத்தை துவங்கியுள்ளோம்.

பெரும்பாலான‌ பத்திரிக்கை - தொலைக்காட்சி ஊடகங்கள் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் கார்ப்பரேட் ஊடகங்களாகவே மாறிப்போய்விட்டன.

சமூக வலைதளங்களும் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும், தற்போது நாட்டின் முக்கியப் பிரச்சனைகளை எல்லாம் கடைகோடி மனிதனுக்கும் கொண்டு சேர்ப்பது சமூக வலைத்தளங்களும், அதில் வினையாற்றும் இளைஞர்களும்தான் என்பதை மறுக்க முடியாது.

சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இணைந்து சமூகத்துக்காக பணியாற்ற வேண்டிய தருணமிது.

எமது ஊடகத்தை அனைவரும் ஆதரியுங்கள்! இதில் வரும் செய்திகளை பார்ப்பதோடு, விரும்புவதோடு (லைக் செய்வதோடு) நில்லாமல், பகிருங்கள் ( சேர் செய்யுங்கள்).

ஒத்த கருத்துடைய நண்பர்கள் இணைந்து பயணிப்போம் வாருங்கள்!

Gmail...
vinaiseimedia@gmail.com

தொடர்புக்கு: 9444801066
என்றும் நட்புடன்
வினை செய் குழு.
நன்றி!

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

வரி உயரும்.., விலை உயரும்.., கோல் உயரும்.., குடி உயருமா..?