3000 followers நன்றி.
நமது வினைசெய் பக்கத்தை குறுகிய காலத்தில் தோழர்கள், ஜனநாயகசக்திகள், மக்கள் என 3000 பேர் பின்தொடர்கிறார்கள். ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த ரசிய புரட்சி நாளன்று "உழைக்கும் மக்களுக்கான சமூக ஊடகக் குரல்" என்ற முழக்கத்துடன் துவங்கினோம். புரட்சிகர அமைப்புகளின் களப்போராட்ட செய்திகள், விவசாய போராட்ட செய்திகள், பொதுக்கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகளின் நேரடி காட்சிகள், காணொளிவழி கூட்டங்கள், செய்தி கட்டுரைகள், ஆங்கில கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள், சர்வதேச செய்திகள், திரைப்பார்வை, நூல் அறிமுகம் என நமது சக்திக்குட்பட்டு தொடர்ச்சியாய் பதிவுகளை தந்துகொண்டிருக்கிறோம்.
இன்னும் பல்வேறு வடிவங்களில் சமூக அக்கறை கொண்ட பதிவுகளை, போராட்ட பதிவுகளை முயன்றுவருகிறோம். களத்தில் போராடினாலும், சமூக ஊடகத்தின் பல்வேறு வடிவங்களான யூடியூப், பிளாக்ஸ்பாட், இன்ஸ்டகிராம், டிவிட்டர் என்ற வடிவங்களையும் பிரச்சார வடிவங்களையும் பயன்படுத்தி வருகிறோம்.
முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட காலத்திலேயே 3000 பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறோம். தொடரந்து உங்கள் ஆதரவை அளியுங்கள்.
தோழமையுடன்,
குழு
வினைசெய்
#வினைசெய் முகநூலில்... 30/04/2021

Comments
Post a Comment