நம்புங்கள் - நம்மால் முடியும்!


காவிக் கரையான் கங்கைச் சமவெளியை அரித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் காவி கடப்பாரைகள் இந்தியாவையே இடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் உத்தரப் பிரதேசம் என்றாலே முகம் சுளிக்கிறது.

ஆனால், பாலைவனத்தில் சோலையாகப் பூத்திருக்கிறது ராஜன்பூர் கிராமம். உள்ளாட்சித் தேர்தலில் இந்த கிராமத்தின் தலைவராக அசீமுதீன் என்ற முஸ்லீம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்ன என கேட்கிறீர்களா? இருக்கிறது. ராஜன்பூர் கிராமம் முழுக்க முழுக்க இந்துக்களைக் கொண்ட கிராமம். ஒரே ஒரு முஸ்லீம் குடும்பம் மட்டும் தான் அங்கு வசிக்கிறது. அசீமுதீனுடைய குடும்பம் தான் அது.

ராஜன்பூர் கிராமத்தைச் சேர்ந்த இந்துவான கிரீஷ் ராவத் சொல்கிறார், “நமது சமூகத்தின் உள்ளார்ந்த மத நல்லிணக்கத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.”

கிரீஷ் சொல்வது ஆரிய சமாஜமும், ஆர்.எஸ்.எஸ்-சும் உருவாகாத கங்கைச் சமவெளியை நினைவூட்டுகிறது. இந்துக்களும், முஸ்லீம்களும் சகோதரர்களாக வாழ்ந்த இனிய காலத்தை கண் முன்னே காட்டுகிறது. மொகலாயர்கள் உருவாக்கிய மத சகிப்புத்தன்மைக்கு உயிர் கொடுக்கிறது.

அசீமுதீனின் வெற்றி மதச்சார்பின்மையின் இதயத்திற்கு இதமளிக்கிறது. இன்னும் காலம் கடந்து விடவில்லை. பாசிசத்தை வீழ்த்தும் வாய்ப்புகள் முடிந்து விடவில்லை. நம்பிக்கையோடு முன்னேறுவோம். நாட்டையே ராஜன்பூராக மாற்றுவோம்.

- சார்லி

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!