கை கோர்ப்போம்!
ஜிக்னேஷ் மேவானி, குஜராத்தின் பாசிச எதிர்ப்புப் போராளி. தேசிய தலித் அதிகார அமைப்பின் தலைவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு பா.ஜ.க-வுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
குஜராத் மாநிலமும் உத்தரப் பிரதேசம் போலத் தான். நோயாளிகளுக்கு சிகிச்சை இல்லை. மருந்து இல்லை. ஆக்சிஜன் இல்லை. கொரோனா மரணங்களுக்கு கணக்கும் இல்லை.
மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் தங்களால் இயன்ற அளவு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுறார்கள். அவர்களில் ஜிக்னேஷும் ஒருவர்.
தற்போது ஒரு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவிட முயன்று வருகிறார் ஜிக்னேஷ். இதற்காக ”மக்களாகிய நாங்கள்” என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து நிதி திரட்டினார். ஐம்பது லட்சம் ரூபாய் திரண்டது. இனி அடுத்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவிடலாம்.
இதை தடுக்கும் நடவடிக்கையில் குஜராத் அரசு இறங்கி விட்டது. மக்களுக்கு தானும் செய்ய மாட்டேன், மற்றவர்களையும் செய்ய விட மாட்டேன் என்பது தானே பாசிச குணம்.
அந்த வகையில் ”மக்களாகிய நாங்கள்” அமைப்பின் வங்கிக் கணக்கை முடக்கி விட்டது. அதாவது ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜிக்னேஷ் திரட்டிய ஐம்பது லட்சத்தை முடக்கி விட்டது.
இதற்கு குஜராத் அரசு சொன்ன காரணம் என்ன தெரியுமா? ”மக்களாகிய நாங்கள்” என்ற பெயரில் ஏற்கெனவே மற்றொரு அமைப்பு செயல்படுகிறதாம். இதனால் தேவையற்ற குழப்பம் வந்து விடுமாம். கூடுதலாக, மக்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது என கேள்வியையும் எழுப்பி உள்ளது.
நடப்பது பாசிச ஆட்சி என ஒவ்வொரு விசயத்திலும் காவி கும்பல் தெளிவு படுத்தி வருகிறது. பாசிசத்திற்கு எதிராக போராடுவோம் என சொல்வது தீர்வு இல்லை. பாசிசத்திற்கு எதிராக நிற்கும் அனைவரோடும் ஒன்றிணைந்து போராடுவதே தீர்வு.
வாருங்கள்! காவி கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவோம்!
ஜிக்னேஷ் போன்ற பாசிச எதிர்ப்புப் போராளிகளோடு கை கோர்ப்போம்!
- சார்லி

Comments
Post a Comment