மக்கள் மருத்துவருக்கு அஞ்சலி!
கடந்த ஆண்டு அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை அறுவை மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, ஒரு இளைஞர் வந்தார். மருத்துவரின் காலைத் தொட்டு கும்பிட்டார். அவர் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியவர் என்பதால், இந்த மரியாதை.
மருத்துவம் என்பது சேவை என்பது கடந்த காலத்தின் மதிப்பீடு. பார்த்தசாரதி போன்ற மருத்துவர்கள் கடந்த காலத்தின் எச்சம். இப்பொழுது மருத்துவம் வணிகம். கொடூர கொரானா காலத்திலும் ஈவிரக்கமின்றி மருத்துவமனைகளும், மருத்துவர்களும் கொள்ளையடிக்கிறார்கள். ஆகையால் மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
பொது சுகாதாரத்துறை வலுவாகும் பொழுது தான் பார்த்தசாரதி போன்ற மக்கள் மருத்துவர்கள் தொடர்ந்து உருவாவார்கள். ஆனால் அரசோ மருத்துவத்தையும் மொத்தமாக கைகழுவ பார்க்கிறது! நாம் தொடர்ந்து போராடவேண்டும்.
'ஐந்து ரூபாய் டாக்டர்' என பத்திரிக்கைகள் அழைக்கின்றன. நாம் 'மக்கள் மருத்துவர்' என அழைப்பது தான் அவருக்கு செய்யும் மகத்தான அஞ்சலி!

Comments
Post a Comment