கரம் சேர்ப்போம்! காவி வன்முறையை முறியடிப்போம்!


தோழர் மாணிக் சர்க்காரை தாக்கி இருக்கிறது காவி கும்பல்.

யார் இந்த மாணிக் சர்க்கார்?

20 ஆண்டு காலம் திரிபுரா மாநில முதல்வராக இருந்தவர். மக்களின் உரிமைகளுக்காக போராடிய முதுபெரும் தலைவர். சிபிஎம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இவர் 2018-ல் முதல்வர் பதவியில் இருந்து இறங்கிய போது, இவரின் சேமிப்பு வெறும் ரூபாய் 2410 மட்டும் தான்.

2018-ல் பாஜக திரிபுராவில் அதிகாரத்துக்கு வந்தது. ஆட்சியில் அமர்ந்தது முதல் காவிகள் சிபிஎம் தோழர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது அடக்குமுறையை ஏவி வருகின்றனர். தங்களை எதிர்க்கும் அனைவரின் குரல்வளையை நெறித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக 10.05.2021 அன்று சாந்திபசார் என்ற இடத்தில் தோழர் மாணிக் சர்க்காரைத் தாக்கி இருக்கிறது காவி கும்பல். ஏற்கெனவே அந்தப் பகுதியில் சிபிம் தோழர்களை காவி கும்பல் தாக்கி உள்ளது. காயம் அடைந்த தோழர்களைப் பார்க்க மாணிக் சர்க்கார் சென்றுள்ளார். அவரது காரை ஓரு காவி கும்பல் மறித்தது. கற்கள், முட்டைகளைக் கொண்டு தோழரைத் தாக்கி உள்ளது.

ஏற்கெனவே, எதிர்க்கட்சித் துணைத் தலைவரான பாதல் சவுத்ரியை மார்ச் மாதத்தில் காவி குண்டர்கள் அடித்து உள்ளனர். இது போன்ற தாக்குதல்கள் தொடர்கதையாக இருக்கின்றன. இவை, ஜனநாயகத்தைக் கொல்ல கார்ப்பரேட்-காவி ரவுடிகள் நாடு முழுவதும் நடத்தும் தாக்குதல்களின் ஒரு பகுதி.

திரிபுராவில் காவிகளின் வன்முறைக்கு எதிராக தமிழகத்தில் இருந்து குரல் கொடுப்போம். கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயக சக்திகளோடும், இடதுசாரிகளோடும் கரம் கோர்ப்போம்.

- சார்லி

முகநூலில்...12/05/2021

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!