கடுப்பேற்றுவோம்!
கொரோனா சாவுகள் பெருகி வருகின்றன. இது வரை 11% பேருக்குத் தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதுவும் ஒரு டோஸ் மட்டும் தான். இரண்டாவது டோஸ் மருந்து இல்லை. நாட்டில் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், தடுப்பூசி மருந்தை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது. கொஞ்சம் இல்லை. கடந்த மாதம் 66 லட்சம் டோஸ் மருந்து ஏற்றுமதி செய்திருக்கிறது.
இதைக் கண்டித்து டெல்லியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
“மோடிஜி! எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்!”
இது தான் சுவரொட்டிகளில் இருந்த வாசகம்.
ஹிட்லரின் பேரன் மோடிஜி இதை சகித்துக் கொள்வாரா? அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் சுவரொட்டி ஒட்டிய 25 பேரை கைது செய்துள்ளது.
இதற்கு எதிராக நாடு முழுவதும் பலர் குரல் எழுப்பி வருகின்றார்கள். கடைசியாக ராகுல் காந்தியும் குரல் எழுப்பியுள்ளார். சுவரொட்டியை பதிவிட்ட ராகுல், தன்னையும் கைது செய்யும்படி சவால் விட்டுள்ளார்.
மோடிஜியை கடுப்பேற்றிய சுவரொட்டியை நாமும் பதிவிடுவோம். தாராளமாக பகிர்வோம். மோடிஜியின் கடுப்பை மேலும் ஏற்றுவோம்.
- சார்லி

Comments
Post a Comment