அன்பார்ந்த தோழர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எங்களது அன்பான கோரிக்கை!





அன்பார்ந்த தோழர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எங்களது அன்பான கோரிக்கை!


கொரானா நிவாரண பணிகளில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்! இளைஞர்களும், மாணவர்களும் பணிகளில் ஈடுபடுகிறார்கள் நிதி கொடுத்து உதவி செய்யுங்கள். முடியவில்லையா பரவாயில்லை. உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முகநூல், வாட்சப் வழியாக இந்த செய்தியை பரப்புவதன் மூலம் உதவி செய்யுங்கள்!

கொரனா முதல் அலை நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்து வீட்டிற்குள்ளேயே மத்திய அரசு சிறை வைத்தது. சிறை வைத்தது என்று சொல்வது சரியா! சிறையில் இருப்பவர்களுக்கு அரசு தானே உணவு, உடை, மருத்துவம் என எல்லாவற்றையும் தருகிறது. அது போல தினம் உழைத்தால் தான் அன்றாட உணவு என்ற நிலையில் பெரும்பாலான மக்கள் வாழும் பொழுது, அவர்களை சிறையில் அடைத்தது போல வீட்டில் அடைத்து வைத்தவர்களுக்கும் அரசு தானே அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

எதிர்கட்சிகள் முதல் அனைத்து முற்போக்கு அமைப்புகளும் வீட்டிற்கு மாதம் பராமரிப்பு கொடு! என தொடர்ந்து குரல் எழுப்பியும் மத்திய அரசும், அ.தி.மு.க அரசும் கண்டுகொள்ளவில்லை. போனால் போகட்டும் என சில மாதங்கள் கடந்த பிறகு ரூ. 1000 மட்டும் தந்தது. எப்பொழுதும் அரசுகள் அப்படித்தான்! இது மக்கள் நலம் நாடும் அரசாய் இருந்தால் தானே!

கொடூரமான கொரோனா காலத்திலும் தடுப்பூசி, மருந்து, மருத்துவ உபகரணங்கள் என அத்தனையிலும் ஊழல், அவர்களின் புரவலர்களான கார்ப்பரேட்டுகள் சம்பாதிக்க அத்தனை வழிகளையும் உருவாக்கி தருகிறது மோடி அரசு.

அரசு கைவிட்ட பிறகு மனிதர்கள் தான் சக மனிதர்களுக்கு உதவவேண்டும். கடந்த காலங்களில் புயல், மழை, வெள்ளம் என அத்தனை பேரிடர் காலங்களிலும் மக்கள் தான் சக மனிதர்களுக்கு ஓடி ஓடி உதவினார்கள். தங்கள் கையில் இருந்த பணத்தை கூட எதுவும் யோசிக்காமல் தந்தார்கள். வீட்டில் உள்ள மளிகை பொருட்களை தந்தார்கள். உடைகள் தந்தார்கள். சாத்தியமான எல்லா வழிகளிலும், எல்லாவற்றையும் தந்தார்கள்.

கொரானா முதல் ஊரடங்கு கடந்தாண்டு மார்ச் மூன்றாவது வாரத்தில் அரசு அறிவித்தது. உழைக்கும் மக்களுடன் எப்பொழுதும் உடனிருப்பதால், மக்களின் சிரமத்தை உடனே புரிந்துகொண்ட வடச் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் வியாசை தோழர்கள், வடச் சென்னை மக்கள் உதவிக்குழு என்ற அமைப்புகள் மூலம் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரானா நிவாரண பணிகளை துவக்கிநார்கள்.

இந்த இரண்டாவது அலை தொடங்கும் வரை கடந்த ஓராண்டுகளாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களையும், உனவும் எளிய மக்களான
சாலையோரம் வசிப்பவர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், கைவண்டி இழுப்பவர்கள், ஆதரவற்ற திருநங்கைகள், ரயிலில் விற்பனை செய்பவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என தேடித் தேடி வழங்கினர்.

மக்களை காக்கும் பொறுப்பை அரசுக்கு உணர்த்த கடந்தாண்டு வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் இணைந்து பல்வேறு தகவல்களை சேகரித்து, ஒரு பொதுநல வழக்கை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் போட்டு நிர்பந்தத்தை ஏற்படுத்தினர்.

கடந்தாண்டு முதல் அலையின் போது மக்கள் நிவாரணப் பணிக்காக, இப்படி
களத்தில் பணியாற்றியவர்கள் ஒரு பக்கம் என்றால், இதற்கு நிதி தந்தவர்களின் பட்டியலும் பெரியது. தன் கையில் இருந்த ரூ.100, 300 என கொடுத்த தொழிலாளிகளும் உண்டு. 5000, 10000 என தந்த வழக்கறிஞர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் என பலரும் உண்டு. கடல் கடந்து வாழும் தமிழர்களும் இதில் பலரும் உண்டு.

கொரானாவின் முதல் அலையை பலருடைய உதவியுடன் கடந்து வந்துவிட்டோம். இதோ, கொரானா இரண்டாவது அலை சுனாமி போல அடித்துக்கொண்டிருக்கிறது. அம்மா, அப்பாவை பலர் இழந்துவிட்டனர். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே உறவையும் பலர் இழந்துவிட்டனர் என நாலா புறத்திலும் இருந்து துக்க செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது.

முதல் அலையின் பொழுது வீட்டில் இருந்தவர்கள்கூட எல்லாம் இந்த நெருக்கடி காலத்தில் மக்கள் பணியாற்ற களத்தில் உள்ளனர்.

பேரிடர் மக்கள் உதவி மையம், வியாசை தோழர்கள், சாரல் ஆகிய குழுக்களைச் சார்ந்த மாணவர்கள், இளைஞர்கள் கொரானா நோயாளிகளை மருத்துவமனை செல்வதற்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் உருவாக்கி தங்கள் சேவையை தொடங்கி செய்து வருகிறார்கள். தவிர, கபசுரநீர், ஹோமியோபதி மருத்துகள், தடுப்பு முகாம்கள், உணவு வழங்குவது,

இப்படி சாத்தியமான எல்லா நிவாரணப் பணிகளையும் செய்து வருகின்றனர்.
புயல், மழை, வெள்ளம் என்ற காலம் வேறு! கொரானா தொற்றினால் உயிர் போய்விடும் என்ற அபாயம் வேறு!

இப்படிப்பட்ட அபாயம் இருந்தால் கூட நம் மக்களை காக்கும் பணியில் துணிந்து சென்னை முழுவதும் பேரிடர் மக்கள் உதவி மையம் ஒருங்கிணைப்பில் இளைஞர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் இயங்கி வருகிறார்கள்.

களத்தில் இவர்களோடு இணையுங்கள். தங்களால் இயன்ற நிதி கொடுங்கள். பொருட்கள் கொடுங்கள். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களும், அலுவலக நண்பர்களுக்கு முகநூல், வாட்சப் வழியாக அனுப்புங்கள். சாத்தியமானதை பெற்றுத்தாருங்கள். நீங்கள் தருகிற எளிய தொகையாக இருந்தாலும் களத்தில் பணியாற்றுகிற அனைவரையும் ஊக்கப்படுத்தும்.

தனிமையில் இருக்கிறோம் என யாரும் நினைக்கவேண்டாம். உங்களை
" வுட்றமாட்டோம்" என சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் உங்களோடு இருக்கிறார்கள். அவர்களோடு பேசுங்கள். இணையுங்கள். நாம் ஒன்றாக இணைந்தால், நம்மால் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை.

கொரோனா முதல் அலையை எதிர்கொண்டது போலவே இரண்டாவது அலையையும் எதிர்கொள்வோம்! மனித சமூகத்தை காப்போம்!

தொடர்புக்கு:

பேரிடர் மக்கள் உதவி மையம்.

9791858078
7305738473

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!