தோல் உரிப்போம்!
நோயால் கொத்துக் கொத்தாக மக்கள் சாகிறார்கள். மத்திய அரசு மக்களின் வேதனையை ரசிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கும்பல் மாட்டு மூத்திரம் குடிக்க சொல்கிறது. மாட்டு மலத்தைப் பூசிக் கொள்ள சொல்கிறது.
சிகிச்சைக்கு வழியில்லாமல் இறந்து போனவர்களை நக்கல் செய்வது சங்கிகளின் வழக்கம். இந்த சூழலில் மணிப்பூர் மாநில பா.ஜ.க தலைவர் சாய்க்கோம் சிங் கோவிட் தாக்கி இறந்து போனார்.
இதற்கு இரங்கல் தெரிவித்தார் கிஷோர் சந்திரா என்ற பத்திரிக்கையாளர். அவர் இப்படி எழுதினார். ”மாட்டு மூத்திரமும், சாணியும் பயனில்லை என்பது தெரிந்து விட்டது”.
இரேந்திரா என்ற பாசிச எதிர்ப்புப் போராளி கூடுதலாக எழுதினார். “மாட்டு சாணி மருந்து இல்லை. தீர்வு அறிவியலில் உள்ளது. புரபசரே அமைதியாக உறங்குங்கள்.”
மணிப்பூர் அரசு இருவரையும் தேச துரோகச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது. 2017-ல் மணிப்பூரில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது. அன்று முதல் எதிர்ப்புக் குரல்களை நசுக்கி வருகிறது. பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குகள் தொடுக்கிறது. சிறையில் அடைக்கிறது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிஷோரும், இரேந்திராவும் ஏற்கெனவே பல முறை கைது செய்யப்பட்டவர்கள். எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் தங்களின் கருத்திரிமையை விட்டுத்தர மாட்டோம் என களத்தில் நிற்கிறார்கள். பா.ஜ.க ஆட்சியை மக்களின் முன்னால் தோலுரிக்கிறார்கள்.
மணிப்பூர் பாசிச எதிர்ப்புப் போராளிகளின் உணர்வை வரித்துக் கொள்வோம். அவர்கள் வழியில் காவிகளை தோலுரிப்போம்.

Comments
Post a Comment