தோழர் மைதிலி சிவராமனுக்கு அஞ்சலி!


81 வயதான தோழர் மைதிலி, கடந்த 10 ஆண்டுகளாக அல்சைமர்ஸ் என்கிற ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வந்தார். சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 30/05/2021 அன்று மரணமடைந்தார்.


சென்னையில் இளநிலை கல்லூரி படிப்பை படித்து, முதுகலை படிப்பை அமெரிக்காவில் முடித்தார். ’ரேடிகல் ரிவ்வியூ’ பத்திரிக்கையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றினார்.

1968ம் ஆண்டு கீழ் வெண்மணி படுகொலை நடந்த பொழுது, அதை ஆங்கிலத்தில் விரிவாக எழுதி உலகம் அறிய செய்தார். அதே போல வாச்சாத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கிலும் தோழரின் பங்கு முக்கியமானது. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்திலும் தொடர்ந்து ஊக்கமுடன் பங்காற்றினார்.

‘கஸ்தூர்பா : மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள்’ என்ற புத்தகமும், ‘ஒரு வாழ்க்கையின் துகள்கள்’ (Fragments of Life) இரண்டும் அவருடைய முக்கிய படைப்புகள்.

1973ல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை கட்டியெழுப்பிய முக்கிய தோழர்களில் இவரும் ஒருவர். துவங்கிய பொழுது, துணைத்தலைவராகவும் பொ|றுப்பில் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

தோழர் மைதிலி சிவராமனுடைய இழப்பு சமூகத்துக்கு பெரிய இழப்பு. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!