அன்பார்ந்த வாசகர் பெருமக்களே!
வினை செய் முகநூல் பக்கம் மற்றும் பிளாக் இரண்டும் கம்யூனிசத்தின் பேரால் நடக்கின்ற திருத்தல்வாதம், அதிநவீன திருத்தல் வாத போக்குகளுக்கு எதிராக களமாடுகிறது என்பதை அறிவீர்கள். தொடர்ந்து எமது கட்டுரைகளை வாசிப்பது மட்டுமின்றி மார்க்சியத்தை நேசிக்கின்ற அனைவருக்கும் இதனை கொண்டு செல்லும் படி தங்களை தோழமையுடன் வேண்டுகிறோம்.
இந்தியாவில் மார்க்சிய லெனினியம் என்ற பெயரில் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்படுகின்றன. இவை அனைத்திலும், ஜனநாயக விரோத அதிகாரத்துவ தன்மை கொண்ட தலைமை கட்டுப்படுத்துகிறது என்றே கருதுகிறோம்.
இதனால்தான் புறநிலையில் உள்ள சமூக எதார்த்தத்திற்கு பொருத்தமாக தனது திசை வழியை தீர்மானித்துக் கொள்வதற்கு பதிலாக தனது அகநிலை விருப்பத்தின் அடிப்படையிலும், சித்தாந்த குருட்டு பார்வையிலும் செயல்பட்டுக் கொண்டு பிற அமைப்புகளிடம் இருந்து விலகி நிற்கின்றனர்.
இதனால் நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கு எதிரான பாசிச பயங்கரவாத சக்திகள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு முன்னேறுவதை தடுக்க முடியாமல் தமக்குள் புறம் பேசிக் கொள்வதும், பொது எதிரியை தாக்குவதை காட்டிலும் கம்யூனிச அமைப்புகளை தாக்குவதை பிரதானப்படுத்தியும் செயல்படுகின்றன.
ஆளும் வர்க்கத்திற்கு உவப்பான இந்த ஐந்தாம் படை வேலையை விழிப்புணர்வுடன் இருந்து முறியடிக்காவிட்டால் நாம் நேசிக்கும் மக்கள் பாசிச அபாயத்தின் கீழ் விழுவதை தடுக்க முடியாது.
அதிகாரத்துவம் என்பது கட்சியின் தலைமை உறுப்புகளை தாக்குகின்ற ஒரு விதமான நோய் என்கிறார் தோழர் மாவோ .
கட்சி வாழ்க்கையில் ஏற்படும் அதிகாரத்துவ போக்குகள் மற்றும் திருத்தல்வாத போக்குகளை எதிர்த்து போராடுகின்ற போதே வெளியில் உள்ள சந்தர்ப்ப வாதம், திருத்தல் வாதம் போன்றவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும். அதற்கான சித்தாந்த கண்ணோட்டத்தை வழங்குவதற்கு தொடர்ந்து வினை செய் பயணிக்கும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.
நண்பர்கள், உறவினர்கள், அரசியல் ஆர்வலர்கள் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள்.
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
வினை செய்.
.jpg)
Comments
Post a Comment