காஷ்மீர் யாருக்கு சொந்தம்?

 பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு முன்பாகவே முன்னேறிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்த மாநிலம் காஷ்மீர். மொழி உரிமை மட்டுமின்றி பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம், கல்விமுறை ஆகிய அனைத்திலும் முன்னேறிய வாழ்க்கையை கொண்டிருந்தது காஷ்மீர்.


பிரிட்டன் காலனியாதிக்க அரசாங்கம் இந்தியாவை தனது ஆட்சியில் இருந்து கைமாற்றி இந்தியாவில் உள்ள தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் பிரதிநிதிகளான காங்கிரஸிடம் ஒப்படைப்பதற்கு தயாரான போது காஷ்மீர் மாநிலத்துடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டார்கள்.


காஷ்மீர் மன்னரான ஹரிசிங் மற்றும் இந்திய ஒன்றியத்தின் பிரதிநிதியான சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகிய இருவருக்கும் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா? இரண்டையும் நிராகரித்து தனி நாடாக செயல்படுவதா என்பதை காஷ்மீர் மக்களிடம் சர்வதேச சமூகம் மற்றும் ஐநாவின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதன் அடிப்படையில் முடிவு செய்வது என்று இரண்டு தரப்புமே ஏற்றுக்கொண்டு கையெழுத்திடப்பட்டது.


காஷ்மீரில் உள்ள இயற்கை கொஞ்சும் அழகை ரசிப்பதற்கு வருகின்ற சுற்றுலா வருமானத்தின் மூலம் கிடைக்கின்ற பல்லாயிரம் கோடி வருமானத்தையும், தேயிலை, காப்பி மற்றும் பலவிதமான பழங்கள், இயற்கை மூலிகைகள் மட்டுமின்றி காஷ்மீரில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களையும் கொள்ளையிடுவதற்கு இந்த சட்டப்பிரிவு தடையாக இருக்கிறது என்று இந்திய தரகு முதலாளிகள் எரிச்சலுடன் இருந்தனர்.


தனது மாநிலத்தில் உள்ள அனைத்து வளங்களையும் இந்திய ஒன்றிய அரசு சட்டத்தின் பெயரால் கொள்ளையடித்து செல்வதை அங்குள்ள மக்கள் எதிர்த்து சுயநிர்ணய உரிமைக்காக போராட துவங்கினர். அந்த சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை பிரிவினைவாத கோரிக்கை என்ற முறையில் ஒடுக்கியே வந்தது காங்கிரசு தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு.



கார்ப்பரேட் நலன்களை உயர்த்திப் பிடிக்கின்ற காவி பாசிச கும்பலான ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட தனி அந்தஸ்து என்ற 370 வது பிரிவை ரத்து செய்து காஷ்மீரை இரண்டாக பிரித்தது. அதற்கு எதிராக எழுந்த அனைத்து வகையான ஜனநாயக குரல்களும் பிரிவினை வாதம், தீவிரவாதம் என்று முத்திரை குத்தி ஒடுக்கப்பட்டது.


மோடி அரசு செய்த இந்த காஷ்மீர் பிரிவினை சட்டப்படி செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு, காஷ்மீரி தேசிய இனத்தின் மீது மற்றுமொரு தாக்குதலை கொடுத்துள்ளது. காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது முதல் அங்குள்ள சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஜனநாயக வழிமுறைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் உண்மையான மன உணர்வு வெளி உலகத்திற்கு தெரியாமல் அடக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தம் என்று ஐந்து நபர் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அறிவித்த காரணத்தினால் இந்திய ஆளும் வர்க்கங்கள் குறிப்பாக தேசங்கடந்த தரகு முதலாளிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜகவினர் கும்மாளமடிக்க துவங்கியுள்ளனர்.


தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை சட்டபூர்வமான வழிமுறைகளிலேயே பறிக்கின்ற இந்த கொடூரமான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள், தேசிய இன உரிமைப் போராட்ட அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.


பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதற்காக கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசு ஒன்றை அமைப்பது உடனடி தீர்வாக உள்ளது.


சண்முகம்.


Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!