Posts

Showing posts from July, 2021

ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்தரும் - ஆசிரியர் வீ. அரசு

Image
இலங்கையின் மட்டகளப்பில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக் கழகத்தின் விபுலானந்தர் நுண்கலை ஆய்வு மையத்தில் செப் .2017  ல் ஆசிரியர் ஆற்றிய உரையை நூல் வடிவில் கொண்டு வந்துள்ளனர் .   பல நூற்றாண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழ் இசை மரபின் மகத்துவத்தை மீட்டுருவாக்கம் செய்த இரு பெரும் ஆளுமைகள் குறித்து இச்சிறு நூல் விளக்குகிறது .   ஒடுக்கப்பட்ட சாதி இழிவிலிருந்து மீள கிறித்தவத்தில் சேர்ந்த பெற்றோருக்கு மகனாய் பிறந்த ஆபிரகாம் பண்டிதர் , ஆசிரியப் பணிக்கு திண்டுக்கல் வருகிறார் .   சித்த மருத்துவ பரம்பரை என்பதால் அதில் ஈடுபாடு ஏற்பட்டு மூலிகைகள் தேடி மலைகளில் பயணிக்கையில் , கருணாமிருத ரிஷியை சந்திக்கிறார் . அவரை தனது குருவாக ஏற்கிறார் . பிறகு அங்கிருந்து தஞ்சை பகுதிக்கு குடி பெயர்ந்து , மூலிகைப் பண்ணை ஒன்றை அமைக்கிறார் . புதுப்புது மருந்துகள் தயாரித்து விற்றதில் பெரும் செல்வந்தராகிறார் . இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த பாக்கியம் என்பவரின் வீணை , பியானோ வாசிப்பில் இனம் புரியா ஈர்ப்பு ஏ...

ஊரடங்கு உண்டு! கடனுக்கு மட்டும் அவகாசம் இல்லை!

Image
மதியம் 1.30 மணி. அருகே உள்ள அந்த உணவகத்திற்குள்ளே சாப்பிட அமர்ந்தேன். எப்பொழுதும் உடனே என்ன வேண்டும் என கேட்பவர்கள், இப்பொழுது சில நிமிடங்கள் ஆகியும் யாரும் வந்து கேட்கவில்லை. கல்லாப்பெட்டி இடத்தில் அமர்ந்திருந்த அம்மாவே, ”என்ன வேண்டும் சார்?” என கேட்டார். “சாப்பாடு” என்றேன். உள்ளே உரத்த குரலில் சொன்னார். ”சாருக்கு சாப்பாடு கொடுங்க!” சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது, ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த ஏலச்சீட்டுக்காரர் வந்தார். அவர் கட்டவேண்டிய தொகையை கேட்கிறார். அந்த அம்மா “ஏற்கனவே நான் சொல்லிட்டேன்! ஒரு மாசமா ஊரடங்கு. வியாபாரம் இல்லை! இரண்டு மாஸ்டரில் ஒருவரையும், வேலையாட்கள் நான்கு பேரில் இருவரை நிப்பாட்டிட்டேன். நிலைமை சரியானதும் தர்றேன்!” என்றார். அதற்கு அந்த ஏலச்சீட்டுக்காரர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அம்மா “இதுதான் முடியும்! உங்களால் என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள்” என கோவத்துடன் சொன்னார். “அப்படி சொல்லிட்டு போங்கோ! நான் கம்பெனியில் சொல்லிட்டு போறேன்!” என வேகமாக கிளம்பினார். வாடிக்கையாளர்கள் தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகவா, ஆற்றாமையை சொல்வதற்காகாவோ என்னைப் பார்த்து சொன்னார். “மூணு சீட...

மனிதநேயமற்ற நீதி என்பது அநீதியே!

Image
இந்திய குடிமக்களும், சிறைத் துறையினரும், காவல்துறையினரும், நீதிபதிகளும், ஆட்சியாளர்களும், மருத்துவர்களும், தாம் உண்மையில் மனிதர்கள்தானா என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது! ஸ்டான் சாமி - பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்காக பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போராடிய இவர், 2020ம் ஆண்டு அக்டோபரில் ஊபா எனும் கொடிய சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பார்க்கின்சன் எனும் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட உறிஞ்சு குழாய் டம்ளர்( சிப்பர்) சிறையில் அவருக்கு தரப்படவில்லை. அவரது உறவினர்களும், நண்பர்களும் அனுப்பிய டம்ளர்களையும் சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் அளிக்கவில்லை. தன்னிடம் கைப்பற்றப்பட்ட டம்ளரை தனக்கு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார் ஸ்டான் சுவாமி. அவரது கோரிக்கையை பரிசீலிக்க 20 நாட்கள் அவகாசம் கோரியது என்ஐஏ. அதன் பிறகும் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறப்பு நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. கைதின் போது அவர்களால் டம்ளர் கைப்பற்றப் படவில்லை என்ற கூற்றின் உண்மையை நிரூபிக்க கூறாததோடு சிப்பருக்கான கோரிக்கைக்கு ஆம், இல்லை என பதில் சொல்ல எதற்கு 20 நாட்கள் என்றும்...