Posts

சிலி மக்கள் புரட்சி - கம்யூனிசம் 2.0 | கலையரசன்

Image
சிலியில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டி விட்டுள்ளது. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"! தென் அமெரிக்காவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தையும், பெருமளவு படித்த மத்தியதர வர்க்க இளம் தலைமுறையினரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாதவாறு கலவர பூமியாக காட்சியளிக்கிறது. ஒரு மெட்ரோ ரயில், 16 பேருந்து வண்டிகள் கொழுந்து விட்டு எரிந்தன. பத்துக்கும் குறையாத சூப்பர் மார்க்கெட்கள், மருந்துக் கடைகள் சூறையாடப்பட்டன. கலவரத்திற்குள் அகப்பட்டு பதினொரு பேர் கொல்லப்பட்டனர்.  சிலி ஜனாதிபதி செபஸ்டியான் பிஞேரா “நாம் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம்” என அறிவித்துள்ளார். “ஒரு பலமான, இணக்கமாக போக முடியாத, எவரையும் மதிக்காத, வன்முறை பிரயோகிக்கத் தயங்காத எதிரியுடன்” இந்த யுத்தம் நடப்பதாக தெரிவித்துள்ளார். சிலியில் நடந்த இராணுவ சர்வாதிகார காலகட்டத்திற்குப் (1973 – 1990) பின்னர், முதல் தடவையாக இராணுவம் வீதிகளில் ரோந்து சுற்றுகிறது. தலைநகர் சான்டியாகோ உட்பட எட்டு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை 1500 பேர் கைது செய்யப்பட்டு...

“அச்சச்சோ கம்யூனிச பூதம்!’ – அல்பேனியா பயணக்கதை.

Image
காலத்தால் அழியாத பொக்கிஷம் தோழர் கலையரசனின் கட்டுரைகள். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பற்றி படர்ந்த கம்யூனிசம் பற்றி அறிமுகத்தை தரும் தோழர் கலையரசனின் கட்டுரைகளை எமது இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். காலத்தின் தேவை கருதி மீண்டும் மீள்பதிவு செய்கிறோம். இளைய தலைமுறை வாசகர்களுக்கு இதனை சமர்ப்பிக்கின்றோம். நன்றி: வினவு (இனையதளம்). “அச்சச்சோ கம்யூனிச பூதம்!’ – அல்பேனியா பயணக்கதை. தனது பயணக் கதையில் அல்பேனியா எனும் சிறிய ஐரோப்பிய நாட்டை நமக்கு அறிமுகம் செய்கிறார் கலையரசன். “அன்னை தெரேசா விமான நிலையம் உங்களை வரவேற்கிறது!” அல்பேனியாவின் தலைநகர் திரானாவின் நவீன சர்வதேச விமான நிலையத்திற்கு அன்னை தெரேசா பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்தியாவில் அநாதை சிறுவர்களுக்கு தொண்டு செய்து உலகப் புகழ் பெற்ற அன்னை தெரேசா இனத்தால் அல்பேனியர். ஆனால் அவர் மாசிடோனியா தலைநகர் ஸ்கோப்யேவில் பிறந்து வளர்ந்தவர். இனத்தால் அல்பேனியர் என்றாலும் இன்றைய அல்பேனிய தேசத்துடன் சம்பந்தம் அற்றவர். ஆனாலும் என்ன? அல்பேனிய தேசியவாதிகள் போற்றுவதற்கு ஒரு பிரபலமான புள்ளி தேவை. அவ்வளவு தான். அல்பேனியாவின் உண்மையான பெயர் ஷ்கி...

அல்பேனியா : ஐரோப்பாவின் நாஸ்திக – முஸ்லிம் நாடு !

Image
ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம் நாடு எது? அல்பேனியா! உலகின் முதலாவது நாத்திக நாடு எது? அல்பேனியா! இது எப்படி சாத்தியம். தெரிந்து    கொள்வோமா ? - கலையரசன் ஐரோப்பாவின் நாஸ்திக – முஸ்லிம் நாடு! அல்பேனியா பயணக்கதை – 2 முதல் பாகம் இவை அல்பேனியா பற்றி பெரும்பாலானோர் அறிந்திராத தகவல்கள். அந்த நாட்டில் எழுபது சதவீதமானோர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகிறவர்கள். குறைந்த பட்சம் பெயரளவிலாவது. ஐரோப்பாவில் பல நாடுகளில் மசூதிகள் இருந்த போதிலும், தொழுகை நேரம் ஒலிபெருக்கியில் குரான் ஓதி அழைப்பு விடுப்பதை அல்பேனியாவில் தான் கண்டேன். ஒவ்வொரு தடவையும் மசூதி ஒலிபெருக்கியின் ஊடாக காற்றில் தவழ்ந்து வரும் அரபி வசனங்களை கேட்கும் பொழுது மத்திய கிழக்கில் உள்ள அரபி- முஸ்லிம் நாடொன்றுக்கு வந்து விட்ட பிரமை உண்டாகிறது. கவலைப்படாதீர்கள், இது ஐரோப்பா தான். நம்மைப் போலவே, பெரும்பாலான அல்பேனிய முஸ்லிம்களுக்கும் அரபி மொழி தெரியாது. அத்துடன் தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்பதற்காக விழுந்தடித்துக் கொண்டு மசூதிக்கு விரையும் யாரையும் நான் காணவில்லை. பொது இடங்களில் எல்லோரும் தத்தமது வேலைகளில் ஆர்வமாக இருக்கிறார்களே தவிர...

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

Image
"கருவாட்டை மடியில் கட்டிய பாப்பாத்தி” திருதிரு என்று விழித்துக் கொண்டிருப்பது போல, ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு மாற்றாக ’வெடிகுண்டு அரசியலை’ மடியில் சுமந்திருக்கும் வினவு மற்றும் செங்கனல் தலைமை, செயல்தந்திர அரசியல் வழியை நிராகரிக்கின்ற வகையில் செயல்பட்டுக் கொண்டே தனது அரசியல் சந்தர்ப்பவாதத்தை அணிகளிடமிருந்தும், வெகுஜன மக்களிடமிருந்தும் மறைத்து இரட்டை வேடம் போடுகின்றனர். தாங்கள் ஒன்றாக இருந்த போது கூடி பேசி நிறைவேற்றிய, பாசிசம் குறித்த அவர்களது ஆவணங்களை தூக்கி மூலையில் போட்டுவிட்டு, ’இடது சந்தர்ப்பவாத’ வழிமுறையில் செயல்பட்டு வருகின்றனர். சிவப்பு சட்டை போட்டுக் கொள்வதன் மூலமும், மார்க்சிய சொல்லாடல்களை அங்கங்கே தூவிக்கொண்டு போவதன் மூலமும் தனது அணிகளை ஏய்த்து விடலாம் எனக் கனவு காண்கின்றனர். எமது அமைப்புகளில் இருந்து வெளியேறி தனியாக ஒரு கூட்டத்தை நடத்தி அவர்கள் நிறைவேற்றிய ஆவணத்தில் இருந்து கீழ்க்கண்ட பகுதிகளை இங்கே தருகின்றோம். ”பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்பது மேலிருந்து கட்டப்படும் ஒன்று; புரட்சியின் எதிரிகள் ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவினர் ஆகியோருடன் சேர்ந்து வைக்கப்படும் மு...

பாசிசம் குறித்த விளக்க உரைகள் பாகம்_4

Image
முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு! ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையென்றால் பாசிசம் என்ன என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது... -  பாசிசத்தைக் குறித்து விளக்கும்போது ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகள் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதைக் காண்போம். பாசிசமானது பெரிய பூர்ஷுவா வர்க்கத்தினரிடமிருந்து அதிகாரத்தை வென்றெடுத்து அதைக் குட்டி பூர்ஷுவா பகுதியினருக்குக் கிடைக்கச் செய்கிறது. அந்தக் குட்டி பூர்ஷுவா வர்க்கம் இந்த அதிகாரத்தை பெரிய பூர்ஷுவா வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்று அவர்கள் கூறினார்கள். நீங்கள் இந்த நிலைப்பாட்டை துராத்தி, டிரவெஸ் 2 போன்ற இத்தாலிய சமூக ஜனநாயக எழுத்தாளர்களின் எழுத்துக்களில் காண முடியும். இந்த நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் தங்களுடைய நீண்டகால நடைமுறைக் கொள்கையை உருவாக்கிக் கொண்டார்கள். பாசிசத்திற்கெதிரான போராட்டமானது அனைத்து சமூக மக்கள் பகுதியினராலும் நடத்தப்படும் என்பதே அந்த நடைமுறைக் கொள்கை. இவ்வாறுதான், பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடு குறித்த பிரச்சினையை அவ...

பாசிசம் குறித்த விளக்க உரைகள் பாகம் 3

Image
உண்மையில் பாசிசம் என்பது என்ன ? பாசிசமானது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும்.... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 3 முன்னுரை இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள சொற்பொழிவுகள் பால்மிரோ – டோக்ளியாட்டி “எதிரிகள்” என்ற தலைப்பில் நிகழ்த்திய 15 பகுதிகளைக் கொண்ட உரையின் பிரதான பகுதியாகும். இது, 1935-ம் ஆண்டில் மாஸ்கோவில் உள்ள லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் நிகழ்த்தப்பட்டது. எட்டு உரைகளது மூலப் பிரதிகளின் நிழற்படப் பிரதிகளை மாஸ்கோவிலுள்ள மார்க்சிய – லெனினியக் கழகம் எர்னெஸ்டோ ரகியோனேரியிடம் அளித்தது. அவர்தான் தற்பொழுது டோக்ளியாட்டியின் தொகுப்பு நூல்களை எடிடோரி ரியூனிட்டிக்காக மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். இது 1970-ம் ஆண்டில் முதன் முறையாக புத்தக வடிவில் தோன்றியது. அதற்குப் பின் மேலும் மூன்று உரைகள் – பாசிசம் குறித்து ஒன்றும், இத்தாலிய கம்யூனிஸ்டுகளின் இதர “எதிரிகள்” (சோசலிஸ்டுகள் மற்றும் குடியரசுவாதிகள், அராஜகவாதிகள்) – குறித்து இரண்டும் கிடைக்கப்பெற்று இத்தாலியில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தற்ப...

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

Image
2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான தேர்தல் என்று நாங்கள் கருதுகிறோம். இதற்காக கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற செயல்தந்திர அரசியலின் கீழ் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று முடிவெடுத்துள்ளோம்.  இதன் காரணமாகவே புதிய ஜனநாயக புரட்சியை கைவிட்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தல் அரசியலில் கரைந்து விட்டோம். ஓட்டு பொறுக்கிகள் அரசியலில் இறங்கி விட்டோம் என்று அவதூறு பரப்புகிறார்கள் எமது அமைப்பிலிருந்து ஓடிப்போன வினவு மற்றும் செங்கனல் கும்பல். எண்பதுகளில் உருவாக்கப்பட்ட எமது அரசியல் கோட்பாட்டு முடிவுகளில் இருந்து நாங்கள் விலகி விடவில்லை. போர்தந்திர இலக்கிற்கு குறிப்பிட்ட தருணத்தில் வகுக்கப்படும் செயல்தந்திரங்கள் சேவை செய்ய வேண்டும் என்பதிலும், குறிப்பிட்ட தருணத்தில் அரசியல் நடத்தை வழி போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரம் ஆகிய இரண்டினாலும் வழிநடத்தப்பட வேண்டும் என்கின்ற கோட்பாட்டு முடிவுகளிலும் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி பாதை என்...