Posts

நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை.

Image
இந்தியாவின் அண்டை நாடானநேபாளத்தில், நேபாள ஜனநாயகக்குடியரக்கான புதிய நகல் அரசியல் சட்டமியற்றும் பணி, தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவாகிய மே 27ஆம் தேதிக்குள் நிறைவுறாமல் போனது. அதனால், அச்சபை கலைக்கப்படுவதாகவும் புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் மீண்டும் நடைபெறும் என்றும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரான பாபுராம் பட்டாராய் அறிவித்துள்ளார். நேபாள மக்கள் எழுச்சிக்குப் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக்காலம் கடந்த 2010ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் நேபாள காங்கிர, போலி கம்யூனிஸ்டு கட்சியான ஐக்கிய மாலெ கட்சி மற்றும் பிற கட்சிகள் நேபாளத்தின் எதிர்கால அரசியல் சட்டம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதில், இச்சபையில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள பெரிய கட்சியான மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து முரண்பட்டதால், அரசியல் சட்டத்தை இயற்றும் பணி கடந்த நான்காண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த சபையைக் கலைத்துவிட்டு ...

அன்பார்ந்த வாசக தோழர்களே!

பேக் ஐடியில் உலவும் ஹேக்கர்கள், முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் ஊடாடும் கிரிமினல் கூட்டத்தை அடிக்கடி எதிர் கொண்டு இருக்கிறோம். பிரபலமான நபர்கள், அரசின் உயர் பதவியில் இருப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்களின் மெயிலையோ அல்லது வாட்ஸ்அப், முகநூல் பக்கங்களையோ ஹேக் செய்து போலியான பதிவுகளை போடுவதும், அல்லது முழுவதும் முடக்குவதும் உலகம் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது.  எமது வினைசெய் முகநூல் மற்றும் பிளாக்ஸ்பாட் இரண்டையும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருட்டுக் கும்பல் ஒன்று போலி கணக்கில் உள்ளே நுழைந்து முடக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இது ஏதோ தொழில்நுட்பக் கோளாறு என்று தான் இருந்தோம். ஆனால் ஒரு வாரத்திற்கும் மேலாக முகநூல் முடக்கப்பட்ட பிறகு தான் தொழில்நுட்ப வல்லுனர்களின் மூலம் நடந்த விவரத்தை அறிந்து கொண்டோம். சொந்தக் கருத்துகள் இல்லாமல் பிறரது கருத்துகள் மீது குறுக்கு வழியில் தாக்குதல் நடத்தும் திருட்டு கும்பல் சீப்பை எடுத்து வைத்து விட்டால் திருமணமே நின்று விடும் என்ற படு பிற்போக்கான சிந்தனையுடன் செயல்படுகின்றனர்.  அதிநவீன தொழில்நுட்பத்துடன், செயற்கை நுண்ண...

நேபாளத்தில் ஆட்சி கவிழ்ப்பு

Image
சூழ்ச்சி- சதிகளில் மேலாதிக்கவாதிகள், புரட்சிப் போரில் மாவோயிஸ்டுகள். அண்டை நாடான நேபாளத்தில், கடந்த பிப்ரவரி முதல் நாளன்று, மன்னர் ஞானேந்திரா தனது அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம், பெயரளவுக்கு நீடித்து வந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையின் தலையைச் சீவி, உயிரைப் பறித்து சவக் குழிக்கு அனுப்பி விட்டார். ஏற்கெனவே, 2001இல் அவசர நிலையை அறிவித்தும் 2002இல் நாடாளுமன்றத்தைக் கலைத்தும் பிரதமர் தியோபா தலைமையிலான தற்காலிக பொறுப்பு அரசு தொடங்கி வைத்த சர்வாதிகார சதிராட்டத்தை இப்போது மன்னர் முழுவீச்சில் முழுமைப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்கியும், செய்தி ஊடகங்களின் குரல் வளையை நசுக்கியும், மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளையும் ரத்து செய்தும், காலவரையின்றி அவசரநிலையை அறிவித்தும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் வானளாவிய அதிகாரத்துடன் கொக்கரிக்கிறார். பின்தங்கிய வறுமை நிலையில்உள்ள ஏழை நாடான நேபாளத்தில், மன்னாராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக 1990இல் நடந்த ஜனநாயகத்துக்கான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பெயரளவிலான நாடாளுமன்ற ஆட்சிமுறை புகுத்தப்பட்டது. இருப்பினும் வரம்பற்ற அதிகாரம் மன்ன...

நேபாளம்-மாவோயிச புரட்சி வரலாறு!

Image
  அண்டை நாடான நேபாளத்தில், கடந்த பிப்ரவரி முதல் நாளன்று, மன்னர் ஞானேந்திரா தனது அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம், பெயரளவுக்கு நீடித்து வந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையின் தலையைச் சீவி, உயிரைப் பறித்து சவக் குழிக்கு அனுப்பி விட்டார். ஏற்கெனவே, 2001இல் அவசர நிலையை அறிவித்தும் 2002இல் நாடாளுமன்றத்தைக் கலைத்தும் பிரதமர் தியோபா தலைமையிலான தற்காலிக பொறுப்பு அரசு தொடங்கி வைத்த சர்வாதிகார சதிராட்டத்தை இப்போது மன்னர் முழுவீச்சில் முழுமைப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்கியும், செய்தி ஊடகங்களின் குரல் வளையை நசுக்கியும், மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளையும் ரத்து செய்தும், காலவரையின்றி அவசரநிலையை அறிவித்தும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் வானளாவிய அதிகாரத்துடன் கொக்கரிக்கிறார். பின்தங்கிய வறுமை நிலையில்உள்ள ஏழை நாடான நேபாளத்தில், மன்னாராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக 1990இல் நடந்த ஜனநாயகத்துக்கான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பெயரளவிலான நாடாளுமன்ற ஆட்சிமுறை புகுத்தப்பட்டது. இருப்பினும் வரம்பற்ற அதிகாரம் மன்னரிடமே குவிக்கப்பட்டிருந்தது. ஓட்டுக் கட்சிகளின் பதவிச் சண்டை, கட்சித்...

தோழர்களே!

“நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிப்பது தான் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியம் என்றாலும், நேபாள மக்கள் ஜனநாயகப் புரட்சி தற்போது ஒரு புதிய இடைக் கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது நேபாளத்தில் மன்னர் ஆட்சியை தூக்கி எறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்பதை அந்த இடத்தில் உடனடி நோக்கமாகக் கொண்டு போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல் தந்திரத்தை வகுத்து மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது” என்று 2008 -ஆம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் எழுதி இருந்தோம். குறிப்பிட்ட போர்த்தந்திர காலகட்டத்தில் பல்வேறு இடைக் கட்டங்கள் தோன்றும். அந்த இடைக் கட்டங்களை சரியாக கணித்து அதற்கு பொருத்தமான செயல்தந்திரம் வகுத்து கொள்ள வேண்டும். அதன் ஒளியில் முழக்கங்களை தீர்மானித்து மக்களை அரசியல் படுத்துவதும், மக்களைத் திரட்டுவதும் தான் அந்த இடைக் கட்டத்தை கடந்து செல்வதற்கான சரியான மார்க்சிய - லெனினிய அரசியல் வழியாக இருக்கிறது. குறிப்பிட்ட இடைக்கட்டம் என்பது சில பத்தாண்டுகளுக்கு அப்படியே நீடிக்கும் என்பது அரசியல் தற்குறிகளின் பார்வையாகும். இடைக்கட்டம் என்...

இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றும் முனைப்பில் காவி பாசிஸ்டுகள்!

Image
  மூன்று பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, வீடுகளை பொக்லைன் மூலம் இடித்துத் தள்ளி தங்களது 'கடைமையை' நிறைவேற்றியது பிஜேபி அரசு. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு காணொளி பலரையும் பதைபதைக்க வைத்தது. போலிசாரின் துப்பாக்கிகள் தொடர்ச்சியாக வெடித்துக் கொண்டிருக்கும் போது, கையில் கம்போடு சிலரை துரத்திக்கொண்டு ஓடிவரும் நபர், குண்டுக்கு பலியாகி வீழ்கிறார். அவரது இறந்த உடலை சூழ்ந்து நின்று சிலர் கட்டைகளால் தாக்குகின்றனர். அவரால் துரத்தப்பட்டவர்களில் ஒருவனான போட்டோகிராபர், அந்நபரின் மார்பின் மீது கொலைவெறியோடு எகிறி, எகிறி மிதிக்கிறான். துப்பாக்கிக் குண்டுக்கு பலியான அந்த நபர் தீவிரவாதியா என்ன? இல்லை. 28 வயதே நிரம்பிய மொய்னுல் ஹக் எனும் பெங்காலி முஸ்லிம் விவசாயிதான் அவர்! நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் நடந்தது அஸ்ஸாமின் தரங் மாவட்டத்தில் உள்ள தால்பூர் கிராமத்தில்தான். அப்பகுதியின் நிலங்களை சீர்படுத்தி, சிறிய அளவில் விவசாயம் செய்து அங்கு நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பெங்காலி முஸ்லிம்களை, அங்கிருந்து அப்புறப்படுத்த அரசு பயங்கரவாதிகள் முயன்றபோது நிகழ்ந்த கொடூர சம்பவம்தான் அது. அங்கு வசித்து ...

வினை செய் வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு.

Image
  அன்பார்ந்த தோழர்களே!  இன்றைய அரசியல் சூழலில் முகநூல் பக்கம் தொடர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டியுள்ளது என்பதை நாங்கள் உணர்கிறோம்.ஏகாதிபத்திய நிதி மூலதனம் உருவாக்குகின்ற நுகர்வு கலாச்சாரம், பண்பாட்டு ரீதியாக, அரசியல் விழுமியங்கள் அற்ற தக்கை மனிதர்களை உருவாக்குகிறது. அரசியல், சித்தாந்தம், லட்சியம், அர்பணிப்பு, தியாகம் போன்ற சொல்லாடல்களில் பின்னே உள்ள வலிமையான பொருட்களுக்கு உண்மையான மதிப்பு சமூகத்தில் குறைந்து கொண்டே போகிறது. ஏன் என்றால் இந்த சொல்லாடல்களை உபயோகிக்கின்ற மனிதர்கள் திடீரென்று தலைகுப்புற கவிழ்வதும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் நழுவுவது என்ற காரணங்களினால் சமூகத்தில் காத்திரமான விஷயங்களை விவாதிப்பதும் அதற்கு நேர்மையாக வாழ்நாள் முழுவதும் இருப்பது சாத்தியமற்றது, உடனே சாத்தியம் என்னவோ அதை பற்றி பேசலாம் போன்ற தற்குறித்தனங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்திய அரசியல் சூழலில் பாசிசம், கார்ப்பரேட் காவிப் பாசிசமாக வடிவெடுத்து ஏறித் தாக்கிவரும் இந்த சூழலில் அரசியல் சித்தாந்தம் குறிப்பாக சோசலிசம், கம்யூனிசம் போதிக்கும் மார்க்சிய-லெனினி...