Posts

Memories (2013) மலையாளம்

Image
  கதை. நாயகன் ஒரு போலீசு அதிகாரி. அவருடைய குழு தீவிரவாதிகளை கொல்லும் பொழுது, ஒருவர் தப்பிக்கிறார். பிறகு, அவர் நாயகனின் துணைவியாரையும், குட்டிப்பெண்ணையும் கொல்கிறார். குடும்பத்தை இழந்த துயரத்தில், எப்பொழுது பாரும், பாட்டிலுமாக சுற்றுகிறார். வேலைக்கும் செல்வதில்லை. நகரில் ஆட்கள் கடத்தப்பட்டு, கொடூரமாக கொல்லபட்டு, மக்கள் கூடுமிடங்களில் தொங்கவிடுகிறார்கள். ஒன்று, இரண்டு என கொலைகள் தொடர்கின்றன. யாரையும் பிடிக்கமுடியவில்லை. மேலிருந்து அழுத்தம் தருகிறார்கள். நாயகன் ஒரு திறமையான அதிகாரி. உயர் அதிகாதி அவரைப் பார்த்து பேசுகிறார். மறுக்கிறார். அம்மா சென்டிமென்ட் மூலம் ஏற்க வைக்கிறார். கொலை செய்யப்படுகிறவர்கள் மீது சில எழுத்துக்கள் இருக்கின்றன. அதை தேடிப்பார்த்தால், பைபிளுக்கு கொண்டு செல்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாயகன் முன்னேறுகிறார். கொலைகளுக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்பதை கண்டுபிடித்தார்களா என்பது மீதிக்கதை! **** இந்தப் படத்தை 'திருஷ்யம்' இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கினார். இதன் வெற்றியில், தமிழில் "ஆறாது சினம்" என அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்தது. சின்ன...

டிராக்டர் வழித்தட (Route) குழப்பங்களுக்கு காவல்துறையே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு

Image
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் காவல்துறையினர் தான் மிருகத்தனமாக செயல்பட்டதாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் விவசாயிகள் வன்முறையில் ஈடுபட விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினர். காவல்துறையினர் மிக மோசமான முறையில் திட்டமிட்டு, சில டிராக்டர்களைக் கடந்து செல்ல அனுமதித்ததாகவும், பின்னர் பல இடங்களில் மற்றவர்களை நிறுத்தி, குழப்பத்தையும் கோபத்தையும் உருவாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்து வந்திருந்த விவசாயிகள் குழு ஒன்று, ஒரு திட்டமிடாத பாதையில் மத்திய டெல்லியை நோக்கி நகர்ந்தது. அவர்கள் முன்னால் இருந்த டிராக்டர்களை மட்டுமே பின்பற்றி சென்றதாகக் கூறினர். அவர்கள் முன்னால் சென்ற டிராக்டர்கள் தான் தடுப்புகளை அகற்றிச் சென்றுள்ளனர். தாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து தெரியாமல் அவர்கள் இருந்துள்ளனர். மற்றவர்களைப் பின்பற்றி செல்வதை மட்டும் செய்துள்ளனர். விவசாயிகள் யாரும் வன்முறையைத் திட்டமிடவில்லை. ஒரு சில இளைஞர்கள் மட்டும் மத்திய டெல்லியை நோக்கி செல்வதில் ஆர்வமாக இருந்தனர். விவசாயிகளைப் பின்னுக்கு...

கேஸ் மானியம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி போனது!

Image
மானியத்தை அவரவர் வங்கி கணக்கில் போடுவதாக பிரதமர் சொன்னார். 2018ல் ஜூனில் ரூ. 230.66 மானியம் 2021ல் ஜனவரியில் ரூ. 24.95 மானியம். அதையும் வங்கியில் வரவு வைக்கிறார்களா நம்மில் யாரும் சரிபார்ப்பதில்லை! மானியத்தை சொல்லி, சொல்லி ஆதாரை குறுக்கு வழியில் மக்கள் தலையில் கட்டினார்கள். எதிர்காலத்தில் மானியம் இருக்காது! ஆதாரை வைத்து நம்மை எல்லாம் நசுக்கப் போகிறார்கள் என்றோம். இதோ கேஸ் மானியத்தை இன்னும் சில மாதங்களில் அநேகமாக இல்லாமல் செய்துவிடுவார்கள்!

12 Years Slave (2013) ஆங்கிலம்

Image
“I don’t want to survive. I want to Live” – Soloman Northup. கதை. 1842ல் அமெரிக்காவில் நடக்கிறது. கருப்பினத்தினவரான நாயகன் அமெரிக்காவின் ஒரு பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். தச்சராக தொழில் செய்கிறார். வயலின் வாசிப்பவராகவும் இருக்கிறார். இருவர் அவரைத் தேடிவந்து, தாங்கள் சர்க்கஸில் வேலை செய்து வருவதாகவும், சில நாட்கள் அவர் வந்து வயலின் வாசித்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்கிறார்கள். அவர்களுடன் செல்கிறார். முதல்நாள் அவர்களுடன் மது அருந்தி, தூங்கப்போனால், விடிந்தால், அவர் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார். அந்த இருவரும் அவரை ஒரு அடிமையாக விற்றுவிட்டு சென்றிருக்கிறார்கள். தான் சுதந்திரமனிதன் என சொல்கிறார். கொடூரமாக அடித்து துவைக்கிறார்கள். மற்ற கருப்பினத்தவர்களுடன் அடிமைச் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறார். அவரை ஒருவர் வாங்கிச்செல்கிறார். அடிமைகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அடிக்கலாம். அதிகப்பட்சமாக கொல்லலாம். பல்வேறு கொடுமைகளுக்கு பிறகு அவர் மீண்டாரா என்பது முழுநீளக்கதை. **** ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்த கருப்பின மக்களை விலங்குகளைப் போல பிடித்து வந்து...

உயிர் பலி வாங்குவது பாதாள சாக்கடைகளா? அலட்சியமான அரசுகளா?

Image
ஒருநாள் நம் வீட்டு கழிவறை அடைத்துக்கொண்டால், வீடே நாறி திணறிப்போய்விடுகிறோம். நமது பகுதிகளில் இரண்டு நாட்கள் குப்பைகளை அகற்றாவிட்டால், பாதாள சாக்கடை அடைத்துவிட்டால், அந்த பகுதியே நாசமாகிவிடுகிறது. அந்த பகுதியை கடப்பதற்குள் நரக வேதனையாகிவிடுகிறது. ஆனால், அந்த கழிவுகளையும், குப்பைகளையும் நாள் முழுவதும் கையாளும் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கையை நாம் பல சமயங்களில் நினைத்துப் பார்க்க தவறுகிறோம். “கக்கூஸ்” ஆவணப்படத்தில், மதுரையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்யும் அந்த இளம் தாய், “என் மேலே நாத்தமடிக்குதுன்னு.. என் குட்டி பையன் என் பக்கத்துல வரமாட்டேன்னு தினம் சொல்றான்” என கண் கலங்கி சொல்கிற காட்சி ஆண்டுகள் கடந்தும் இன்னும் மனதைவிட்டு அகல மறுக்கிறது. ஊரையை சுத்தமாக வைத்திருக்க கூடிய அவர்களின் சமூக மதிப்பும் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே தான் வைத்திருக்கிறோம். எங்கள் பகுதியில் குப்பை சேகரிக்கிற தூய்மை பணியாளர் ஒரு விசேசத்தில் தனது சொந்தங்களூக்கு சந்தோசமாய் சாப்பாடு பரிமாறிய பொழுது, ஓடி வந்து, அவரை அங்கிருந்து “நைசாக” நகர்த்தி கூட்டிப் போய்விட்டார்கள். இப்படி ஊரையே சுத்தமாக வைத்திருப்பதற்கு தூய்...

பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-4

Image
பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-4 தென் அமெரிக்க கண்டம். அமெரிக்காவின் தின்பண்டம். 1958-ல் கழுகின் காலில் முள் தைத்தது. கியூபாவில் விடுதலைப் போர் வெற்றி. இப்போது தேசிய பொருளாதாரத்தைக் கட்டுகிறது வெனீசுலா. அவர்களோடு கை கோர்த்தார் மொராலஸ். விடுமா அமெரிக்கா? டாலர் சாக்கடை வழிந்து ஓடியது. அரசியல் கட்சிகள், ராணுவம், ஊடகம் அனைத்தும் நக்கின. 2019 நவம்பரில் தேர்தல். நான்காவது முறையாக வென்றார் மொராலஸ். தேச துரோகிகள் முறைகேடு என்றார்கள். உலக ஊடகம் ஒப்பாரி. எதிர் கட்சிகள் கலாட்டா. மொராலஸைக் கொல்ல கூலிப்படைகள். பதவி விலகினார் மொராலஸ். ஆனஸ் அதிபர் ஆனார். மொராலஸ் கட்டியதை எல்லாம் இடித்தார். இப்போது மக்கள் திருப்பி அடித்திருக்கிறார்கள். தேர்தலில் மீண்டும் மொராலஸின் கட்சி வெற்றி. தேச துரோகிகள் மீது நடவடிக்கை பாய்கிறது. ஆனஸ் திருட்டுத்தனமாக அமெரிக்காவிற்கு ஓட வழி தேடுகிறார். டிரம்பின் தோழியே! மக்களின் கோபம் உன்னை விடாது. ஓடு. ஒளிந்து கொள். தொடர் முடிந்தது! -சார்லி

பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-3

Image
  பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-3 மொராலஸ் யார்? பழங்குடி இனம். விவசாயி மகன். விவசாயிகளின் போராட்டங்களோடு வளர்ந்தார். விவசாய சங்கத்தை வலுவாக்கினார். படிப்படியாக அதன் தலைவரானார். சோசலிச இயக்கத்தில் சேர்ந்தார். போராட்டங்களில் முன் நின்றார். பெக்டெல் என்ற அமெரிக்க கம்பெனி நீரை உறிஞ்சி கொள்ளையிட்டது. கோச்சாம்பா நகரில் மக்கள் அடித்து விரட்டினர். மொராலஸ் முன்னணியில் நின்றார். மக்களின் மனதை வென்றார். விளைவு? 2006 குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி. அறிவித்தார். இனி இயற்கை வளங்கள் நாட்டின் சொத்து. ரயில்வே, தொலைத்தொடர்பு தேசியமயம். எரிவாயு கம்பெனிகளின் லாபத்தில் 88% வரி. கார்ப்பரேட்டுகள் அலறின. மக்கள் சிரித்தனர். அரசின் கருவூலம் நிரம்பியது. நாடெங்கும் அரசுப் பள்ளிகள் அரும்பின. 100% எழுத்தறிவு பெற்ற நாடானது பொலிவியா. குக்கிராமங்களிலும் அரசு மருத்துவமனைகள் முளைத்தன. மக்களின் நோய் நொடி தீர்ந்தது. இதோடு நிற்கவில்லை. அமெரிக்க கழுகை குறி வைத்தார். எப்படி? நாளைப் பார்க்கலாம். -சார்லி