Posts

அறிவோம் வரலாறு!

 ஜெர்மனியில் பாசிச முகாம் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது, இன்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி பாசிச கொள்கைகள் எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதை தொடர்ந்து தனது கருத்து பிரச்சாரம் மூலம் தெரிவித்து வருகின்ற அமெரிக்க சோசலிசவாதிகள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கருத்துக்களை நாமும் ஊக்குவிப்போம். மேல்நிலை வல்லரசின் கோட்டைக்குள் பாசிச பயங்கரவாத அரசு கட்டமைப்பிற்கு எதிராக போராடுகின்ற, பேசுகின்ற, எழுதுகின்ற எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஜனநாயக வாதிகள் அனைவரையும் ஆதரிப்போம். உலக போலீஸ்காரனாக தன்னை கருதிக் கொண்டு உலக மேலாதிக்கத்திற்கு வெறிபிடித்தலையும் அமெரிக்காவை எதிர்த்து போராடுகின்ற ஆற்றலையும் துணிவையும் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வோம். ஆசிரியர் குழு, வினை செய்

சுயவிமர்சனம் - திருத்தப்பட்ட பதிவு!

Image
  அன்பார்ந்த தோழர்களே! வினை செய் வலைப்பக்கம் மற்றும் முகநூல் பக்கத்தில் தோழர் கணேசன் பற்றி இளஞ்செழியன் என்பவர் எழுதியிருந்த இரங்கற்பாவில் அவரது இறுதி காலத்தில் சாதிய கண்ணோட்டத்துடன் செயல்பட்டதாக கருத்தை பதிவு செய்திருந்தார். தோழர் கணேசன் செயல்பட்ட அமைப்பு வாழ்க்கை முறையின் மீது அவதூறு செய்கின்ற வகையில் சாதிய சிந்தனை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது பரிசீலனை இன்றி வெளியிட்டதை தவறு என சுயவிமர்சனமாக உணர்கிறோம். இத்தகைய கண்ணோட்டத்தில் இரங்கற்பா எழுதிய இளஞ்செழியன் என்ற தோழருக்கும் இது பற்றி விமர்சனமாக சுட்டிக் காட்டி உள்ளோம். அவரது தனிப்பட்ட புரிதல்களின் அடிப்படையில் தான் எழுதிய கவிதை வரிகளின் தவறுதலாக உண்மைக்கு மாறான அர்த்தத்தை கொடுக்கும் வகையில் எழுதிய தனது தவறை உணர்ந்து மீண்டும் அவர் எழுதிக் கொடுத்த வரிகளை இங்கே பதிவிடுகிறோம். ஆசிரியர் குழு, வினை செய். தோழனே! கணேசனாய் களமாடிய அன்பழகனே! இப்படி ஒரு இரங்கல் தங்களுக்கு தெரிவிக்கும் அவல நிலை ஏற்படும் என இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை ஒருபோதும் எண்ணியதில்லை. கல்லூரியில் வெளிவந்த நாள் முதல் கரம் பிடித்து எமை அரவணைத்து உலகை புரிந்து கொள்ளும்...

உளவுத் துறையாலும், உட்கட்சி பூசல்களாலும் சிதைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சி. பாகம் - 2

Image
 காலனிய நாடுகளிலும், முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவம் போன்ற எந்த நாடுகளாக இருந்தாலும் அந்த நாட்டில் ஆட்சி புரிகின்ற அரசு கட்டமைப்பு பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என பிரச்சாரம் செய்து மக்களை புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குகின்ற செயல்திட்டத்தை முன்வைத்து போராடுவது கம்யூனிச இயக்கங்கள் மட்டுமே. எனவே, கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அந்த நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசின் கூலிப்படைகளான போலீஸ், உளவுத்துறை மற்றும் இராணுவத்தினரால் எப்போதும் வேட்டையாடப்படுகின்ற கட்சியாகவே உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஐந்தாம் படைகளை உருவாக்கி முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களை ஆள்காட்டி வேலை செய்கின்ற 'திருப்பணிக்கு' பொருத்தமானவர்களை பிடிப்பதற்கு உளவுத்துறை எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறது. அது சாத்தியம் இல்லாத இடங்களில் தானே நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை போல உள்ளே நுழைந்து படிப்படியாக கட்சியின் செயல்திட்டங்களை கண்டுபிடிப்பது மட்டுமின்றி, குறிப்பாக அதை முன்வைக்கின்ற நபர்கள், அவர்களின் பொறுப்புகள், அவர்கள் வாழும் இடங்கள் ஆகியவற்றை உளவறிந்து ரகசிய கொலைக் குழுக்களிடம் ஒப்படைக்கி...

உளவுத் துறையாலும், உட்கட்சி பூசலாலும் சிதைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சி!

Image
  “ஒரு மனிதன் கம்யூனிஸ்ட்டாக மாறுவது ஒன்றும் அற்புதம் இல்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக நீடித்து வாழ்வதுதான் அற்புதமான விஷயம்” என்று முன்வைத்தார் தோழர் மாசேதுங். பல்வேறு வர்க்கங்களில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் ஒவ்வொரு தோழரும் தனது பழைய வர்க்க வாழ்க்கையை மாற்றிக் கொண்டு பாட்டாளி வர்க்கமாக அல்லது அந்த நாட்டின் ஆகக்கேடாக ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலைக்கு தன்னை தாழ்த்திக் கொள்வது, வரக்க இறக்கம் செய்து கொள்வது ஆகியவற்றின் மூலம் மட்டுமே சிறந்த கம்யூனிஸ்டாக உருவாக முடியும். அவ்வாறு ஒரு தோழரை உருவாக்குவதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர்களின் தொடர்ச்சியான துரோகத்தினாலும், கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற அணிகளின் தியாகத்தினாலும் நிலைத்து நிற்கிறது. ஆனாலும் கூட அவ்வப்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தன்னை ஒரு மத பீடமாக கருதிக்கொண்டு ஜனநாயக மத்தியத்துவத்திற்கு கட்டுப்படாமல் தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்தி, நாயக பிம்பங்களை உ...

புதிய ஜனநாயகம். (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) வெளிவந்துவிட்டது.

Image
அன்பார்ந்த வாசகர்களே புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! பிப்ரவரி 2020 உடன் நின்றுபோன எமது புதிய ஜனநாயகம் இதழ் மே மாதம் 2022 முதல் முறையாக வெளிவருகிறது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி தற்போது அச்சு இதழாக புதிய ஜனநாயகம் மே மாத இதழ் வெளிவந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மார்க்சிய-லெனினிய அரசியலை கொண்டு சென்று தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி செயல்பட்ட எமது அரசியல் வெகுசன பத்திரிக்கை, அதல் அரசியல் தலைமை குழுவின் தவறுகளினால் தடைபட்டு நின்று இருந்தது. தற்போதைய அரசியல் சூழலில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியலை கொண்டு செல்வதற்கும் அதன் அடிப்படையில் பரந்துபட்ட மக்களை புரட்சிகர அமைப்பின் கீழ் அணி திரட்டுவதற்கும் புதிய ஜனநாயகம் இதழ் தொடர்ந்து பணியாற்றும் என்பதை உறுதி அளிக்கிறோம். கார்ப்பரேட்-காவி பாசிசம் ஏறித் தாக்கி வரும் இன்றைய சூழலில் ஒட்டு மொத்தமாக நாட்டின் பிரதான எதிரியாக ஆர் எஸ் எஸ்-பாஜக செயல்படுகிறது என்பதை முன் வைக்கிறோம். 90-களில் நமது நாட்டின் மீது திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி நாட்டை மறுக...

மே 25 நக்சல்பரி இயக்கத்தின் எழுச்சி நாள்.

Image
நக்சல்பாரி இயக்கத்தின் முழுமையான வரலாற்றை இந்த சிறு வெளியீடு தெளிவாக முன்வைக்கிறது.  எழுபதுகளில் நக்சல்பரி இயக்கம்  முன்வைத்த போது நிலவிய சமூக பொருளாதார நிலைமைகளுக்கும், 60 ஆண்டுகளுக்குப் பின்பு இந்திய சமூக கட்டமைப்பில் நிலவுகின்ற அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. எனினும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பாதைக்கு வெளியில் மக்களை புரட்சிக்கு அணி திரட்டும் மகத்தான இயக்கம் நக்சல்பரி மட்டுமே. 2008 ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பு மீள முடியாத நெருக்கடியில் விழுந்த பிறகு காலனி, அரைக்காலனி, நவீன காலனி மற்றும் மறுகாலனிய நாடுகளில் அரசியல், பொருளாதார, இராணுவ மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகள் சாத்தியமில்லை என்பதால் பாசிச ஒடுக்கு முறையை தீர்வாக முன்வைக்கிறது ஏகாதிபத்திய முதலாளித்துவம். இந்தியாவில் 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளுக்கு மூர்க்கமாக சேவை செய்வதும், தனது சொந்த சித்தாந்தமான பாசிச பார்ப்பன பாசிசத்தை ஒன்று கலந்து கார்ப்பரேட் - காவிப் பாசிசம் மூலம் மக்களை அடக்கி ஒடுக்குகிறது. இத்தகைய குறிப்பான சூழலில் தேர்தல...

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் கொலைகார நிறுவனம் மீண்டும் செயல்பட துடிப்பது ஏன்?

Image
தூத்துக்குடியில் 15 உயிர்களை கொன்று குவித்த ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்படப் போவதாக அதன் அதிபர் அனில் அகர்வால் மீண்டும், மீண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு உரிய திமிர் தெனாவெட்டுடன் அறிவிக்கிறார். தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கும் கொடூரனாகவும், ஒட்டுமொத்த இந்திய நாட்டின் எதிரியாகவும் உள்ள அனில் அகர்வால் எப்படி துணிச்சலுடன் இவ்வாறு அறிவிக்க முடிகிறது என்று பார்த்தால் வலுவாக கட்டப்பட்டுள்ள அதன் பின்னனியை புரிந்து கொண்டால் மட்டுமே இந்த திமிரான அறிவிப்புகளை எதிர்த்து முறியடிக்க முடியும். பார்ப்பன (இந்து) மதத்தின் முக்கிய சித்தாந்தங்களில் ஒன்றான வேதத்தின் அந்தத்தை விளக்குகின்ற வகையில் வேதாந்தா என்ற பெயருடன் களம் இறங்கியுள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் இந்தியாவிலுள்ள தேசங்கடந்த தரகுமுதலாளிகளில் முன்நிலையிலுள்ள கொடூரமான கொலைகார கார்ப்பரேட் நிறுவனமாகும். வேதத்தின் ‘அந்தமும்’, நிதிமூலதனத்தின் ‘காந்தமும்’ இணைந்த வேதாந்தா! இந்தியாவில் இயங்கும் வேதாந்தா குழுவின் அதிபரான அனில் அகர்வால் 1972 இந்த நிறுவனத்தை நிறுவினார். 40 ஆண்டுகளுக்கு முன்பு ...