Posts

“ஜெயமோகனுக்கும் உண்மைக்கும் துளி அளவாவது சம்பந்தம் உண்டா ?

Image
  நண்பர்களே…. அண்மையில் (பிப்.27, 2024) எழுத்தாளர் ஜெயமோகன் அவரது வலைதளத்தில் “தமிழில் தத்துவம் உண்டா ?” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில்                          ( பொய்யுரையில் )  “ இந்திய தொல்நூல்களெல்லாம் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.”  என்று கூச்சமில்லாமல் எழுதுகின்றார். அப்படி அவரால் குறிப்பிடப்படுகின்ற தொல்நூல்களில் ஒன்று கூட 18ம் நூற்றாண்டில் ஜெர்மனி மொழியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஜெயமோகனைப் பற்றி நான் முன்பு ஒரு தடவை எழுதியுள்ள கட்டுரையில், “இவர் தப்பிலும் அடிப்பார், தவிலிலும் அடிப்பார்,  கிழிந்துவிட்டால் தச்சுகிட்டும் அடிப்பார்” என்று இவருடைய குணத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.  இத்துறையில் ஈடுபட்டு எழுதி வருகின்ற உலக அறிஞர்கள் எவரும் 18ம் நூற்றாண்டில் ஜெர்மனி மொழியில் அவ்வாறான நூல்களை வெளியிட்டதில்லை.  இவ்வாறு உலக அறிஞர்களே துளி கூட அறியாத இத்தகைய உலக “பேரூண்மையைக்” கண்டுபிடித்த ஜெயமோகன் தன்னுடைய அரிய கண்டுபிடிப்பின் வாயிலாகத் தெரிந்த ...

போலிகளை அடையாளம் காண்போம் ! புறக்கணிப்போம் !

Image
  பு.ஜ.தொ.மு பெயரை பயன்படுத்த அருகதையற்றவர்களின் முகத்திரையை கிழித்தெறிவோம்! அன்பார்ந்த தோழர்களே ! புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறோம். தோழர்களே, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கிற தொழிற்சங்கம் புரட்சிகர அரசியலை மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்துடன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டு வருகிறது. தற்போது நாடெங்கும் செலுத்தப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பாசிச நடவடிக்கைக்கு எதிராகவும் தொழிலாளர்களை, அணிதிரட்டுகின்ற புரட்சிகர வேலையை செவ்வனே செய்து வருகிறது. கடந்த 25 ஆண்டு காலமாக முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்தும், தொழிலாளர்களின் சங்கம் அமைக்கும் உரிமைமூலம் அவர்களின் பொருளாதாரக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கூட்டுப் பேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதை சிறப்பாக செயல்படுத்துகின்ற தொழிற்சங்கமாக செயல்பட்டு வருகிறது. அரசு இயந்திரத்தின் தொழிலாளர் விரோத போக்குகளை உடனுக்குடன் அம்பலப்படுத்துவது, அரசுக்கு எதிராக வர்க்க உணர்வோடு தொழிலாளர்கள் போராட வேண்டும் என்ற அடிப்படையில் நாம் செயல்பட்டு வருகிறோம். இச்சமயம், கடந்த இரண்ட...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு வரலாற்றில் நிலைத்து நிற்கும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கம்

Image
  29.02.2024 ஆம் நாள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு மெட்ராஸ் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. வரலாற்றில் நிலைத்த அத்தீர்ப்பு 18.08.2020 அன்று நெடிய வாத பிரதிவாதங்களுக்கு பிறகு தமிழகத்தின் மற்றும் தில்லியின் சிறந்த நட்சத்திர வழக்கறிஞர் பட்டாளங்களுடன் நடத்தப்பட்ட வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் வி.பவானி சுப்பராயன் ஆகியோரால் வழங்கப்பட்டது. 815 பக்கங்களில் மிக ஆழமான சட்ட மற்றும் சமூக புரிதல்களுடன் விளக்கமாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அவர்களால் எழுதப்பட்ட அத்தீர்ப்பு சுற்றுச்சூழல் வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகவும்¸ நீதிமன்றங்களது நேர்மறை சமூக பங்களிப்பில் ஒரு முக்கியமான பதிவாகவும் விளங்குகிறது. 1990களில் 102.50 ஹெக்டேர் நிலங்கள் சிப்காட் நிறுவனம் மூலம் செம்பு உற்பத்தி செய்யும் வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.  16.01.1995ஆம் ஆண்டு அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அத்தொழிற்சாலையை தொடங்க அனுமதி அளித்தது. பின்னர் 22.05.1995ஆம் நாள் அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்...

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-10.

Image
“கிராமங்களில் அடித்தளத்தை கட்டுவது, கிராமப்புறங்களில் இருந்து முற்றுகையைத் தொடங்கி நகரங்களை சுற்றி வளைப்பது. இறுதியில் நகரங்களை கைப்பற்றுவது என்பதே சீனப் புரட்சியில் எங்களது அனுபவமாகும். எமது இந்த அனுபவம் முற்றாக உங்கள் நாடுகளுக்கு பொருந்துமா என்பது ஐயமே. எனினும் எமது அனுபவங்கள் உங்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தக் கூடும். எமது அனுபவங்களை அப்படியே நகலெடுத்து உங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தயவு செய்து நினைக்காதீர்கள். ஒரு நாட்டின் அனுபவம் மற்றொரு நாட்டிற்கு அப்படியே பொருந்தும் என்பது தவறு. உங்கள் நாடுகளின் தனிப்பட்ட தன்மைகள், சூழ்நிலைகளுக்கு ஏற்பவே மார்க்சிய லெனினிய கோட்பாட்டை அங்கே பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டை நீங்களும் பின்பற்ற வேண்டும்”.  தோழர் மாசேதுங்.  தோழர் மாசேதுங் வலியுறுத்தியபடி ஒவ்வொரு நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளை உள்ளடக்கிய உற்பத்திமுறையைப் பற்றி ஆய்வு செய்வது மட்டுமின்றி குறிப்பிட்ட தருணத்தில் நாட்டையும், மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சி போக்குகளை அவதானித்து செயல் தந்திரமாக முன்வைத்து செயல்பட ...

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-9.

மார்க்சியம் என்பது அறிவியல் கலைக்களஞ்சியங்களின் தொகுப்பு அல்ல. அரசியல் பொருளாதார, பண்பாட்டு நிகழ்ச்சி போக்குகளை சமூக விஞ்ஞான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து  பருண்மையான சூழலில் பருண்மையான அமல்படுத்துகின்ற உயர்ந்த அறிவியலாகும். இந்த அறிவியல் கண்ணோட்டத்தில் வரலாற்றின் நிகழ்ச்சி போக்குகளில் சரியான பாதையை வகுத்துக் கொண்டு இடது, வலது சந்தர்ப்பவாத திசைவிலகல்கள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மார்க்சிய லெனினிய அமைப்புகளின் மீது சந்தர்ப்பவாதிகள் தாக்குதலையை தொடுப்பது புதியது அல்ல. மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை புரிந்து கொண்டு, அதன் சாராம்சத்தை கிரகித்துக் கொண்டு அதன் ஒளியில் ஒவ்வொரு நாட்டிலுள்ள அரசியல். பொருளாதார, பண்பாட்டு நிகழ்ச்சி போக்குகளை அவதானித்து புரட்சியை முன்னெடுத்துச் செல்வது அவசியமாகின்றது. அவ்வாறு முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளில் முக்கியமானது அரசியல் மற்றும் இராணுவ போர்த் தந்திரம், செயல் தந்திர்ம் வகுத்து செயல்படுகின்ற விஞ்ஞானம் ஆகும். இந்த விஞ்ஞான கண்ணோட்டத்தை அடியோடு மறுக்கின்ற வினவு தலைமை மார்க்சியத்திற்கு நேர் எதிரான அதிரடி சாகச வழிமுறைகளை முன்வைக்கின்றது என்பதை ஏற...

நாட்டின் அரசியலை பிரதிபலிக்கும் JNU. பாகம் 1.

Image
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். (JNU) முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய அரசியலில் தோன்றும் பல்வேறு விதமான அரசியல் போக்குகள் அனைத்தும் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் பிரதிபலிக்கும் என்பதுதான் இதன் சிறப்புத் தன்மை. நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு கருத்துக்களை முன்னறிந்து கூறுவதற்கு JNU எப்போதும் தயாராகவே உள்ளது. பாசிச அபாயத்தை அது தோன்றும் காலகட்டத்திலேயே முன்னறிந்து முன்வைத்தவர்கள் மாணவர்கள். 2016 ஆம் ஆண்டு எமது இணையதளம் செய்தியாளர்கள் JNU மாணவர்களுடன் நடத்திய நேர்காணல் மற்றும் கட்டுரை தொகுப்புகளை புதிய வாசகர்களுக்கு அறியத் தருகிறோம். வினை செய் ஆசிரியர் குழு. JNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளவாதமா ? செய்தியாளர் குழு ஜே.என்.யு சென்று திரும்பி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. அப்போது கண்ணையா குமார் சிறையிலும் உமர் காலித், அனிர்பான் உள்ளிட்ட தோழர்கள் தலைமறைவாகவும் இருந்தனர். நாங்கள் திரும்பி வந்ததற்கு இடைப்பட்ட நாட்களில் கண்ணையா பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார். தலைமறைவாக இருந்த உமர் காலித் உள்ளிட்ட தோழர்கள்...

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம் -8.

Image
1930 களில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார மந்தம், முதலாளித்துவத்தின் தோல்வி ஆகியவற்றிலிருந்து பிறந்தது பாசிசம். வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி மற்றும் இத்தாலியில் பாசிசம் மற்றும் நாசிசம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கம்யூனிஸ்ட்களையும், சமூக - ஜனநாயக சக்திகளையும், கம்யூனிச ஆதரவாளர்களையும் நர வேட்டையாடியது. அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பணியை வரையறுத்து மூன்றாம் அகிலத்தின் 7-வது காங்கிரசில் தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் ஆற்றிய உரை ஐக்கிய முன்னணி தந்திரம் என்று வெளியிடப்பட்டு ஏறக்குறைய 90 ஆண்டுகள் ஆகிறது. பாசிசத்திற்கு எதிராக பரந்துபட்ட உழைக்கும் மக்களை ஒரே அணியின் கீழ் திரட்டுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி வேலை செய்ய வேண்டும் என்று முன் வைத்ததோடு, குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வேலை செய்வதை வலியுறுத்தினார் டிமிட்ரோவ். இதன் அடிப்படையில் விவசாயிகளை திரட்டுவதற்கு தேவையான விவசாய அமைப்பை கலைத்து விட்டு செயல்பட்ட முந்தைய தலைமையின் விவசாய புரட்சியை கைவிட்ட போக்கை கண்டித்து மீண்டும் விவசாயிகள் அமைப்பை செயல்பட வைத்துள்ளது மக்கள் அதிகாரத்தின் தோழமை அமைப்புகள். ஆனால் விவ...