சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்கேற்றதா? – பேராசிரியர் ராம் புனியானி
கடந்த சில ஆண்டுகளில் பிஜேபி அபரித வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அதன் தாய்க் கழகமான RSS குறித்து அவ்வப்போது பொது வெளியில் விவாதிக்கப் படுகிறது. RSS சித்தாந்தவாதிகள், தமது இயக்கமானது, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பு செய்ததாக அவ்வப்போது பேசி வருகின்றனர். மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் போது, முதல்வர் உத்தவ் தாக்கரே, " RSS சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்ததே இல்லை. வெறுமனே பாரத் மாதாகீ ஜெய் என்று கோஷமிடுவதே உங்களை தேசபக்தராக்கி விடாது" என பேசியது மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் பட்னாவிஸ், " RSS - ஐ உருவாக்கிய ஹெட்கேவர் சுதந்திர போராட்ட வீரர்" என்று தாக்கரேவுக்கு பதிலளித்தார். பட்னாவிஸ் கூறியதில் ஓரளவு உண்மையுள்ளது. RSS நிறுவனரான ஹெட்கேவர், 1920 - ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து ஓராண்டு சிறையில் இருந்தார். 1925-ல் RSS இயக்கத்தை உருவாக்கிய பின்பும் இரண்டு தருணங்களில் இந்திய தேசிய இயக்கத்துடன் ஓரளவு இணைந்து செயல்பட்டார். எனினும் அப்போது தனது இந்து தேசியவாதத்தை வெளிப்படுத்தியதால் இந்திய தே...